முத்தம் கொடுக்க, விதம் விதமா யோசிக்கிறாய்ங்களே... வைரலாகும் சாரா அலிகானின் சரமாரி லிப் லாக்
மும்பை: நடிகை சாரா அலி கானின் முத்தக்காட்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார் சாரா.
தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா படத்தில் நடித்தார். தற்போது 'லவ் ஆஜ்கல்' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

இம்தியாஸ் அலி
2009 ஆம் ஆண்டு சைஃப் அலி கான் நடித்த படம், லவ் ஆஜ்கல். தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருந்தார். இம்தியாஸ் அலி இயக்கிய இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இவர், இப்போது அதே பெயரில் இன்னொரு படத்தை இப்போது இயக்கியுள்ளார்.

காதலர் தினம்
இதில் ஹிரோவாக, கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

முத்தக் காட்சிகள்
இதன் 3 நிமிட டிரைலரும் வெளியாகியுள்ளது. அதில், ஆவேசமான முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார்த்திக் ஆர்யனும் சாரா அலிகானும் விதம் விதமாக, முத்தமிட்டுக் கொள்ளும் அந்த லிப் லாக் காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கெமிஸ்ட்ரி
படத்தின் கதை தெரிந்ததுதான் என்றாலும் சாரா- கார்த்திக் ஆர்யனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











