சாரா அலி கானின் இந்த டிரான்ஸ்பரன்ட் டிரெஸ் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

மும்பை: ஆடையா இல்லை உள்ளாடையா என கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு படு டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கும் உடையை அணிந்து நேற்று இரவு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகை சாரா அலி கான்.

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மூத்த மனைவிக்கு மகளாக பிறந்த சாரா அலி கான் பாலிவுட்டில் இளம் நாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், இவர் அணிந்துள்ள ஆடையின் விலை குறித்த தலையை சுற்றும் தகவலும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சுஷாந்த் ஜோடியாக

சுஷாந்த் ஜோடியாக

மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஜோடியாக கேதார்நாத் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாரா அலி கான். சமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படத்தை ஷேர் செய்து, முதல் முறையாக கேமராவுக்கு முன் நின்றதும், முதன் முறையாக கோள்களை உனது டெலஸ்கோப் வழியாகத்தான் பார்த்தேன் என உருகியுள்ளார்.

போதைப் பொருள் விவகாரம்

போதைப் பொருள் விவகாரம்

பாலிவுட் நடிகர்களை கடந்த ஆண்டு சுத்துப் போட்டு வந்த போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை சாரா அலி கானின் பெயரும் அடிபட்டது. அமலாக்கத்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அந்த சிக்கலிலும் சிக்கித் தவித்தார் நடிகை சாரா அலி கான்.

தனுஷுக்கு ஜோடி

தனுஷுக்கு ஜோடி

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான அட்ரங்கி ரே/கலாட்டா கல்யாணம் படத்தில் அசத்தலான நடிப்பை சாரா அலி கான் வெளிப்படுத்தி இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "சக்க சக்க சக்களத்தி" பாடலுக்கு சாரா அலி கான் போட்ட குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

டிரான்ஸ்பரன்ட் உடை

டிரான்ஸ்பரன்ட் உடை

இன்ஸ்டாகிராமில் பிகினி உடை முதல் ஏகப்பட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோக்களை போட்டு டிரெண்ட் செய்து வரும் நடிகை சாரா அலி கான் தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் கவர்ச்சி உடையை அணிந்து ஏகத்துக்கும் ஸ்கின் ஷோ காட்டியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக இப்படி ஹாட்டாக உடை அணிந்து இணையத்தையே அதிர வைத்தார் சாரா அலி கான்.

இவ்வளவு காஸ்ட்லியா

இவ்வளவு காஸ்ட்லியா

டேவிட் கோமா எனும் ஆடை வடிவமைப்பாளரின் உடையை தான் சாரா அலி கான் தற்போது அணிந்துள்ளார். அவரது வெப்சைட்டில் இந்த ஆடையின் விலை தற்போது 102,200 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இது சலுகை விலை என்றும், முன்னதாக 1,45,900 ரூபாயாக இந்த உடையின் விலை இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

உள்ளாடையுடன் ஸ்க்ரீன் இணைத்து தைக்கப்பட்டது போல இருக்கும் இந்த உடைக்கா ஒரு லட்சம் ரூபாய்? என நெட்டிசன்கள் ரொம்பவே ஷாக் ஆகி ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். பிரியங்கா சோப்ரா, அனன்யா பாண்டே, வருண் தவான் என ஏகப்பட்ட பிரபலங்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளன. சாரா அலி கானுக்கு இன்ஸ்டாகிராமில் 40 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X