twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசி விஸ்வநாதரை தரிசித்த சாரா அலி கான்.. வெடித்தது புதிய சர்ச்சை!

    |

    வாரணாசி: தனுஷின் அட்ரங்கி ரே படத்தின் நாயகி சாரா அலி கான், காசி விஸ்வநாதரை தரிசித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரித சிங்குக்கு மகளாக பிறந்தவர் சாரா அலி கான்.

    கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

    இஸ்லாமிய பெண்

    இஸ்லாமிய பெண்

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் என்பதால், இந்துக்களின் புனித கோயிலான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, சாரா அலி கான் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட சில இந்துக் கோயில்களில், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தீப வழிபாடு

    தீப வழிபாடு

    ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் நடிக்கும் அட்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வாரணாசியில் படத்தின் பூஜையும் போடப்பட்டது. இந்நிலையில், தனது தாய் அம்ரிதா சிங்குடன் நடிகை சாரா அலி கான் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று தீப வழிபாடு செய்துள்ளது பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    சனாதான தர்மம்

    சனாதான தர்மம்

    நடிகை சாரா அலி கான், இந்துக்கள் அணியும் உடையில், நெற்றி நிறைய குங்குமத்துடன் கோயிலில் வழிபட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, சாரா அலி கானை எப்படி கோயில் நிர்வாகம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அனுமதித்தது என்றும், இதனால், சனாதான தர்மம் கெட்டுப் போய்விட்டதாகவும் கேந்திரியா பிராமின் மகாசபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக, பாப் பாடகி பார்வதி கான் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது, சாரா அலி கான் காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார். இதுகுறித்து, விசாரிக்க கேந்திரியா பிராமின் மகாசபை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தம்பியுடன் பிகினியில்

    தம்பியுடன் பிகினியில்

    சில நாட்களுக்கு முன்னதாக தனது தம்பியுடன் பிகினியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் பதிவிட்டது இஸ்லாமிய மதத்தினரிடையே சர்ச்சையை கிளப்பியது. பலரும் சாராவின் செயலை திட்டித் தீர்த்தனர். இந்நிலையில், தற்போது, இந்து கோயிலுக்கு தனது தாயுடன் சென்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    English summary
    Bollywood actor Sara Ali Khan’s ‘sparsh darshan’ of the presiding deity and her presence at Ganga aarti on Dasaswamedh ghat drew her into the epicentre of another row with a Hindu outfit and Deoband clerics calling her act sacrilegious.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X