பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்களை புகழ்ந்து தள்ளியுள்ள நெட்டிசன்ஸ், அவர் நடிப்பை கிண்டலடித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். அவர் முதல் மனைவி அமிதா சிங்கின் மகள் இவர்.
2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார் சாரா.

லிப் லாக் முத்தம்
தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா படத்தில் நடித்தார். பின்னர் 'லவ் ஆஜ்கல்' என்ற இந்திப் படத்தில் நடித்தார். இதில் ஹீரோவாக கார்த்திக் ஆர்யன் நடித்திருந்தார். கடந்த வருடம் காதலர் தினத்தன்று இந்தப் படம் வெளியானது. இதில் சாரா அலிகானும் கார்த்திக் ஆர்யனும் கொடுத்திருந்த லிப் லாக் முத்தம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

கொரோனா பரவல்
இதையடுத்து அட்ரங்கி ரே என்று படத்தில் நடித்து வருகிறார் சாரா. இதில், தனுஷ், அக்ஷய் குமாருடன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் வாரணாசியில் தொடங்கியது. அதற்குள் கொரோனா பரவியதால் இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

த்ரோபேக் வீடியோ
இப்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது. சாரா அலிகான் கடந்த சில மாதங்களுக்கு முன், த்ரோபேக் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில், சிறுவயதில் வெளிநாடு சென்றிருந்தபோது, தான் சாலையில் நடனம் ஆடியதாகவும், பிச்சைக்காரி என நினைத்து சிலர் பணம் போட்டதாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது.

மாலத்தீவு டூர்
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் சாரா, இப்போது மாலத்தீவு சென்றிருக்கிறார். கடந்த சில மாதங்களாக கோலிவுட், பாலிவுட், டோலிவுட் நடிகைகள் மாலத்தீவு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

பிகினி போஸ்கள்
இந்நிலையில், நடிகை சாரா அலிகான், தனது அம்மா அம்ரிதா சிங், சகோதர் இப்ராஹிம் ஆகியோருடன் அங்கு சென்றிருக்கிறார். விதவிதமான பிகினி போஸ்களில் புகைப்படம் எடுத்துள்ள அவர், அதை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். மற்றொரு போட்டோவில் அம்மா அம்ரிதா, சகோதரர் இப்ராஹிமுடன் இருக்கிறார்.
Recommended Video

நல்லா கொடுக்கிறீங்க
பல நெட்டிசன்ஸ், அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர், பிகினி போஸ்லாம் நல்லா கொடுக்கிறீங்க.. ஆனா நடிப்புதான்? என்று கலாய்த்துள்ளனர். ஒருவர், இன்னும் கொரோனா முழுசா போகலை. வீட்டுல பாதுகாப்பா இருங்க என்று அட்வைஸ் செய்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











