நீச்சல் குளத்தில் மிதந்தபடி படிப்பா, நடிப்பா..? ரசிகர்களின் செல்ல கலாயில் தனுஷ் பட ஹீரோயின்!
மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். அவர் முதல் மனைவியின் மகள்.
2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில், தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார் சாரா.

தனுஷ், அக்ஷய்குமார்
தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா படத்தில் நடித்தார். பின்னர் 'லவ் ஆஜ்கல்' என்ற இந்திப் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு சைஃப் அலி கான் நடித்த படம், லவ் ஆஜ்கல். தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருந்தார். இம்தியாஸ் அலி இயக்கிய இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இவர், அதே பெயரில் மீண்டும் இயக்கிய படம் அது.

லிப் லாக் முத்தம்
இதில் ஹிரோவாக கார்த்திக் ஆர்யன் நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்து அன்று வெளியானது. இதில் சாரா அலி கானும் கார்த்திக் ஆர்யனும் கொடுத்திருந்த லிப் லாக் முத்தம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து அட்ரங்கி ரே என்று படத்தில் நடித்து வருகிறார் சாரா.

மதுரையில் ஷூட்டிங்
இதில், தனுஷ், அக்ஷய் குமார் ஆகியோருடன் நடிக்க இருக்கிறார் சாரா அலி கான். இந்தப் படத்துக்கு ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் வாரணாசியில் தொடங்கியது. அதற்குள் கொரோனா வைரஸ் பரவியதால் இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் அடுத்த மாதம் இதன் ஷூட்டிங் மதுரையில் தொடங்க இருக்கிறது.

பிகினி புகைப்படம்
நடிகை சாரா அலிகான் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இப்போது நீச்சல் குளத்தில் ஜாலியாக அமர்ந்தபடி புத்தகம் வாசிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பிகினி புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. பலர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

சாரா ஹாட் அலிகான்
இதை லட்சக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒருவர் இப்படி ஜில்லுனு தண்ணிக்குள்ள உட்கார்ந்தபடி எப்படி உங்களால புக் படிக்க முடியுது? என்று கேட்டுள்ளார். பிங்க் நிஜமாகவே மிரட்டுது என்று கூறியுள்ள ஒருவர், சாரா ஹாட் அலிகான்னு பெயரை மாத்திக்குங்க என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

போஸ் கொடுக்கிறீங்களா?
'நிஜமாகவே படிக்கிறீங்களா? இல்லை போஸ் கொடுக்கிறீங்களா? என்று சிலர் கலாய்த்துள்ளனர். சில நெட்டிசன்ஸ், இதே போல இன்னும் நிறைய போட்டோஸ் போட்டபடியே இருங்க என்று கோரிக்கை வைத்துள்ளனர். பொம்மை மாதிரியே இருக்கீங்க என்று வர்ணித்துள்ள சிலர்,
சுஷாந்த் சிங் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











