ஒரு காபி, செல்ஃபி: மீடியாவை வளைத்துப் போட்ட வாரிசு நடிகை

By Siva

Recommended Video

மீடியாவை வளைத்துப் போட்ட வாரிசு நடிகை-வீடியோ

மும்பை: சாரா அலி கான் செய்த காரியம் குறித்து தான் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். முதல் படம் ரிலீஸாவதற்குள் இரண்டாவது படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

முதல் படத்தில் சுஷாந்த் சிங்குடன் ஜோடி சேர்ந்த அவர் இரண்டாவது படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாகிவிட்டார்.

சிம்பா

சிம்பா

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சிம்பா படத்தில் தான் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் சாரா அலி கான். சிம்பா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பு சாரா அலி கான் தெளிவாக ஒரு காரியம் செய்துள்ளது பாலிவுட்காரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காபி

காபி

தன் முதல் படம் வெளியாவதற்கு முன்பே தனக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி என்று கூறி தன் கைப்பட எழுதிய கடிதத்தை மீடியாவுக்கு அனுப்பி வைத்தார் சாரா. மேலும் தன்னுடன் காபி குடிக்க வருமாறும் அழைப்பு விடுத்தார். சாரா எழுதி அனுப்பிய கடிதத்தை பார்த்த மீடியாக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செல்ஃபி

சாராவின் அழைப்பை ஏற்று மீடியாக்காரர்கள் காபி குடிக்க வந்தனர். சாரா அவர்களுடன் சகஜமாக பேசியதுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சாராவின் இந்த செயல் மீடியாவுக்கு பிடித்துள்ளது.

நல்ல ஐடியா

நல்ல ஐடியா

சாரா மீடியாவை அழைத்து காபி கொடுத்த விஷயம் பற்றி தான் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. சின்னப் புள்ளையாக இருந்தாலும் தெளிவாக யோசித்து மீடியாவை இம்பிரஸ் செய்துவிட்டாரே என்கிறார்கள் பிரபலங்கள். சாரா நடித்துள்ள சிம்பா படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X