அந்த ஹாட் கிஸ் கொடுத்து வைரலான ஹீரோயின் தான்.. தனுஷின் அடுத்த பாலிவுட் படத்தின் நாயகியாம்!

மும்பை: பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் படங்களில் நடித்த நடிகர் தனுஷ், மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டின் இளம் ஹாட் நடிகை சாரா அலி கான் தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் 'சுருளி' படத்தை முடித்துக் கொடுத்துள்ள தனுஷ், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ராட்சசன் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ள தனுஷ், தற்போது மீண்டும் பாலிவுட் பறக்க உள்ளாராம்.

பாலிவுட்

பாலிவுட்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் எல்லா உயரங்களையும் தொட்டுப் பார்த்து விட்டார். தமிழில் இந்த ஆண்டு செம்ம பிஸியில் இருக்கும் தனுஷ் மீண்டும் பாலிவுட்டுக்கு படையெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஞ்சனா கூட்டணி

ராஞ்சனா கூட்டணி

இந்தியில் ராஞ்சனா என்ற பெயரிலும் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரிலும் வெளியான தனுஷின் முதல் பாலிவுட் படத்தை இயக்குநர் ஆனந்த் ராய் இயக்கியிருந்தார். கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராஞ்சனா படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. படம் வெளியாகி 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மீண்டும் ஆனந்த் ராய் இயக்கத்தில் பாலிவுட்டில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

சரியா போகல

சரியா போகல

ராஞ்சனா படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த ஷமிதாப் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. இதனால், தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்துவதை தனுஷ் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.

யார் ஹீரோயின்

யார் ஹீரோயின்

ராஞ்சனா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். தற்போது ஆனந்த் ராய் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட்டின் ஹாட் இளம் நடிகை சாரா அலி கான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாரா அலி கான்

சாரா அலி கான்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளும் பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகையுமான சாரா அலி கான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன ரோல்

என்ன ரோல்

பீகாரி பெண் கதாபாத்திரத்தில் சாரா அலி கான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதற்காக பிகாரி மொழி மற்றும் பாடி லாங்குவேஜ்காக சாரா அலி கான் ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்து வருகிறாராம்.

ஹாட் கிஸ்

சமீபத்தில் வெளியான லவ் ஆஜ்கல் டிரைலரில் கார்த்திக் ஆர்யானுக்கு சாரா அலி கான் கொடுக்கும் ஹாட் கிஸ் இணையதளத்தில் செம்ம வைரலானது. இந்நிலையில், சாரா அலி கானின் அடுத்த ஹாட் செய்தியாக தனுஷுக்கு ஜோடியாக அவர் நடிப்பது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X