மார்ச்சில் தனுஷ், ஏப்ரலில் அக்ஷய்... டபுள் ஆக்டில் சாரா... 2 பேருக்கும் ஜோடியோ? மதுரையில் ஷூட்டிங்
Recommended Video
சென்னை: தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தில் சாரா அலிகான் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் மதுரையில் நடக்க இருக்கிறது.
நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்கியவர் ஆனந்த்.எல்.ராய்.
இவர் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில இந்தி படங்களை இயக்கியுள்ள. இவர், தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.

சாரா அலிகான்
அட்ரங்கி ரே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த காதல் படத்தில் தனுஷூடன், அக்ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். ஷூட்டிங் வரும் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

அக்ஷய்குமார்
இந்தப் படம் தொடர்பான அறிவிப்பும் தனுஷ், அக்ஷய், சாரா ஆகியோரின் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நடிக்க அக்ஷய் குமாருக்கு ரூ.120 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில், சீனியர் ஹீரோக்களான அக்ஷய் குமார், தனுஷுடன் நடிப்பது ஏன் என்று நடிகை சாரா அலிகான் சமீபத்தில் விளக்கம் அளித்தார்.

சிறந்த நடிகர்
அப்போது அவர் கூறும்போது, இந்த படத்தின் ஸ்கிரிப்டை படித்தபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அழுத்தமான கேரக்டர். என்னால் அப்படி நடிக்க முடியுமா? என்று சந்தேகம் இருந்தது. பிறகு இது சவால்தான். செய்வோம் என்று சம்மதித்தேன். என்னுடன் நடிக்கும் அக்ஷய்குமார், நான் ரசிக்கும் நடிகர். தனுஷ், சிறந்த நடிகர் என்று கூறியிருந்தார்.

2 வேடங்களில்
இந்நிலையில் இந்தப் படத்தில் சாரா அலிகான் 2 வேடங்களில் நடிக்கிறார். ஷூட்டிங் மார்ச்சில் தொடங்குகிறது. முதலில் மதுரை மற்றும் பீகாரில் நடக்க இருக்கிறது. மொத்தம் 80 நாட்கள் ஷூட்டிங். சாரா, தனுஷ் நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட இருக்கின்றன. ஏப்ரலில் அக்ஷய்குமார் கலந்துகொள்கிறார். அடுத்த வருடம் காதலர் தினத்துக்கு படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











