புர்கா பாதி, பிகினி பாதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை
மும்பை: நடிகை சாரா கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பாத்டப்பில் நிர்வாணமாக இருந்தபோது எடுத்த வீடியோவை தங்கை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கினார் இந்தி தொலைக்காட்சி நடிகை சாரா கான்.
அதன் பிறகு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

வீடியோ
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சாரா கான் அங்கத் ஹசிஜாவுடன் சேர்ந்து இசை வீடியோ ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். நீச்சல் குளம், படுக்கையறை காட்சிகள் என்று படுகவர்ச்சியாக வீடியோ எடுத்து வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்து பல புருவங்கள் உயரும், நிறைய சர்ச்சைகள் ஏற்படும் என்று சம்பந்தப்பட்டவர்களே தெரிவித்துள்ளனர்.
புர்கா
வீடியோவில் சாரா புர்கா அணிந்து வருவாராம். புர்காவை கழற்றினால் பிகினியில் நிற்பாராம். அந்த புர்கா பாதி, பிகினி பாதி புகைப்படத்தை சாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பர்தா இருக்கட்டும், அதை தூக்காதீர்கள். அப்படி தூக்கினால் அல்லாஹ் தவ்பா தவ்பா என்று வாசகம் வேறு. அதை பார்த்த சிலர் ஜொள்ளுவிட்டாலும் பலர் அவரை விளாசியுள்ளனர். சும்மா சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேடுவதே உங்களுக்கு வேலையாகிவிட்டதா என்று விளாசுகிறார்கள்.

ரசிகர்கள்
சாராவின் பிகினி புகைப்படத்தை பார்த்து இத்தனை நாட்களாக அவருக்கு ஆதரவு தெரிவித்த அவரின் ரசிகர்களே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஒரு ரசிகர் கூறியிருப்பதாவது, உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?. இப்படித் தான் உடம்பை காட்டுவதா? புர்காவின் பெருமையை ஏன் கெடுக்கிறீர்கள், உங்களை பார்த்தால் அசிங்கமாக உள்ளது. இது வரை உங்கள் ரசிகனாக இருந்தேன். இனிமேல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்து
தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன். அடுத்ததாக வீடியோவை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சர்ச்சை வெடிக்கும் என்று தெரிந்தே அந்த வீடியோவில் சாரா கான் நடிப்பது அவரது அற்பத்தனத்தை காட்டுகிறது என்று சின்னத்திரையை சேர்ந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். விளம்பரம் தேட எதையும் செய்யத் துணிந்துவிட்டாரே சாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











