சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் ஆளுயர மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட நிலையில், அந்த புகைப்படத்தை ஷேர் செய்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் போட்ட போஸ்ட் டோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
புஷ்பா படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமாகி விட்டார் அல்லு அர்ஜுன். அதன் 2ம் பாகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் அல்லு அர்ஜுனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

துபாயில் நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் வருவது போல கோட் சூட் அணிந்துக் கொண்டு புஷ்பா போஸ் கொடுத்து நிற்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், சச்சின் மகளையும் அது வெகுவாக கவர்ந்திருக்கிறது.
தேசிய விருது: சுகுமார் இயக்கத்தின் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சமந்தா உள்ளிட்ட பல நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தி பெல்ட்டிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அல்லு அர்ஜுனுக்கு பெற்றுத் தந்தது. டோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அல்லு அர்ஜுனுக்கு அப்படியான ரசிகர்கள் புஷ்பா படத்தின் மூலம் அதிகரித்துள்ளனர்.
மெழுகு சிலை: துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் நேற்று அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை திறக்கப்பட்டது. அந்த சிலை அருகே அல்லு அர்ஜுன் அதேபோல உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்ளிட்ட பிரபலங்களுக்கு மெழுகு சிலை வெளிநாடுகளில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் உள்ள அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜனின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

சாரா டெண்டுல்கர் ட்வீட்: அல்லு அர்ஜுன் தீவிர ரசிகையான சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சினிமாவின் பெருமை அல்லு அர்ஜுன் சாருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு அந்த மெழுகு சிலை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், புஷ்பா 2 ஹாஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.
சோசியல் மீடியா க்ரஷ்: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கிரஷ் ஆக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை புகைப்படத்தை ஷேர் செய்து அவர் வெளியிட்ட போஸ்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள், அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஒரு படம் நடியுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











