ஹீரோயின் ஆனார் பேபி சாரா.. 'கொட்டேஷன் கேங்'கில் பிரியாமணியுடன் நடிக்கிறார்.. ஷூட்டிங் தொடக்கம்!
சென்னை: பிரபல நடிகை பேபி சாரா, கொட்டேஷன் கேங் படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்கிறார்.
தமிழில், தெய்வத்திருமகள், சைவம், விழித்திரு, சில்லுக்கருப்பட்டி உட்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி சாரா.
இவர் இப்போது கொட்டேஷன் கேங் என்ற படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்கிறார்.

சாரா அர்ஜுன்
அருண் விஜய் நடித்த 'பாக்ஸர்' படத்தை இயக்கிய விவேக் இதை இயக்குகிறார். மும்பை நிழலுலகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தக் கதையில் முக்கியக் கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுனும் பிரியாமணியும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது.

ஶ்ரீ குருஜோதி
ஃபிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் சார்பில் காயத்திரி சுரேஷ் மற்றும் ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் ஆகியோருடன் சேர்ந்து இயக்குநர் விவேக்கும் இணை தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இதன் ஷூட்டிங் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நடத்தப்படுகிறது.

புதிய அனுபவம்
இதில் விஷ்ணு வாரியர், சதீந்தர், அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே, ஷெரீன் ஆகியோர் நடிக்கின்றனர். படம் பற்றி இயக்குநர் விவேக் கூறும்போது, 'இந்தப்படம் இந்திய ரசிகர்களுக்கான கதை. சொல்லப்படும் விதத்திலும், தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய அனுபவமாகவும், தரமான படைப்பாகவும் இருக்கும் என்றார்.

சந்தேகம் இருந்தது
'இந்தக் கதைக்கு, ஆக்ரோஷமான கேரக்டரில் இளம் நடிகை ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதற்காக சாராவை தொடர்பு கொண்டோம். அவர் சம்மதிப்பாரா என்று சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இதுவரை அவரை சாதுவான சிறுமியாக பார்த்திருக்கிறோம்.

பழிவாங்கும் கேரக்டர்
ஆனால் ஸ்கிரிப்டை படித்து முடித்துவிட்டு நான் நடிக்கிறேன் என்றார்' என விவேக் தெரிவித்துள்ளார். இதில் அவர் பழிவாங்கும் கேரக்டரில் நடிக்கிறார் என தெரிகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இரண்டு கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











