பிரகாஷ்ராஜ் படத்தில் நடிக்கணும்... இது பேபி சாராவின் ஆசை!

மும்பை: விஜய் இயக்கத்தில் நாசர் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா நடித்து சமீபத்தில் வெளியான படம் சைவம். சேவலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தயாரிக்கப் பட்டுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று மும்பை முல்லுண்டில் உள்ள பி.வி.ஆர். திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து சைவம் படத்தை குழந்தை நட்சத்திரம் சாரா பார்த்தார். படம் முடிவடைந்ததும் ரசிகர்கள் மத்தியில் பேசினார் சாரா.

அப்போது அவர், 'தெய்வத் திருமகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான தன்னை தமிழ் ரசிகர்கள், அவர்கள் வீட்டு குழந்தைபோல் பாவித்து பாசத்துடன் நடந்து கொள்கின்றனர்' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும், இது தொடர்பாக அப்போது அவர் கூறியதாவது:-

பெருமை....

பெருமை....

‘ரசிகர்களுடன் படம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நடித்ததில் பெருமையாக உள்ளது. ஆனால் திருப்திகரமாக இல்லை. இனிமேல் நடிக்கும் படங்களில் இன்னும் சிறப்பாக நடிப்பேன்.

மிகச் சிறந்த அனுபவம்...

மிகச் சிறந்த அனுபவம்...

சைவம் படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது.

தமிழ் ரசிகர்கள்...

தமிழ் ரசிகர்கள்...

அப்போது அங்கு இருந்த தமிழ் மக்கள் என்னை அவர்களின் குழந்தைபோல் பாவித்து பார்த்து கொண்டனர். மிகவும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டனர். மும்பையில் ரசிகர்கள் அதுபோல் அன்பாக இருப்பதில்லை.

பனியாரம் பிடிக்கும்...

பனியாரம் பிடிக்கும்...

தமிழ்நாட்டின் இட்லி, தோசை விரும்பி சாப்பிடுவேன். பனியாரம் என்றால் மிகவும் பிடிக்கும்.

எதிர்கால லட்சியம்...

எதிர்கால லட்சியம்...

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இப்போது 4-ம் வகுப்பு படித்து வருகிறேன். வருங்காலத்தில் நடிப்பு தவிர இசை, இயக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதிக்க விரும்புகிறேன்.

பிரகாஷ்ராஜுடன் நடிக்கணும்...

பிரகாஷ்ராஜுடன் நடிக்கணும்...

குறிப்பாக எனக்கு புகைப்படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும். தமிழ் நடிகர்களில் எனக்கு பிரகாஷ்ராஜை மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X