பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து… பிரபல நடிகை பலி..சோகத்தில் ரசிகர்கள்!
டெல்லி : பிரபல நடிகை சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
அவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வைபவி உபாத்யாயா : பிரபல மாடல் அழகியான வைபவி உபாத்யாயா சீரியல், திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சாஹில் சாராபாய் மீது ஈர்ப்பு கொண்ட குஜராத்திப் பெண்ணான சாராபாய் vs சாராபாய் படத்தில் நடித்திருந்தார். 2017 இல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராபாய் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை அடுத்து, வைபவி உபாத்யாயா மிகவும் பிரபலமானார்.
அண்மையில் சபாக் படத்தில் : சாராபாய் vs சாராபாய் படத்தின் வெற்றியால் வைபவி உபாத்யாயாக்கு ''க்யா கசூர் ஹை ஆம்லா கா'' அனுபமா போன்ற டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.மேலும், தீபிகா படுகோனே நடித்த சபாக் படத்திலும், திமிர் படத்திலும், ப்ளீஸ் ஃபைண்ட் அட்டாச்டு என்ற வலைத் தொடரிலும், அகூபர், பா ரிடயர் தாய் சே, மற்றும் கோட் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கார் பள்ளத்தில் கவிழ்ந்தது : இந்நிலையில் ,நடிகை வைபவி உபாத்யா தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரது கார் ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே நடிகை வைபவி உபாத்யா உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இன்று இறுதிச்சடங்கு : அவரது உடல் நேற்றிரவு சண்டிகருக்கு கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வைபவிக்கு அவரது உறவினர்கள் நண்பர்கள் திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கைக்குரிய நடிகை : வைபவி உபாத்யா மரண செய்தி கேட்டு கலங்கிய சாராபாய் படத்தின் தயாரிப்பாளர் ஜே.டி.மஜீதியா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், வைபவி உபாத்யாயா ஒரு நம்பிக்கைக்குரிய கலைஞர், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது. அவரது அகால மரணம் தொழில்துறையிலும் உலகிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவரது ரசிகர்களின் இதயங்களில் அவள் எப்போதும் நினைவில் இருப்பார் என்று சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











