21 வருடம் ஆனாலும்.. அந்த ஏக்கம் இன்னும் மாறல.. மீண்டும் அரங்கேறிய அந்த லெஸ்பியன் முத்தம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை செல்மா பிளையரின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படியொரு லிப் லாக் முத்தத்தை கொடுத்து வைரலாக்கி உள்ளார் நடிகை சாரா மிச்சல் கெல்லர்.

1999ம் ஆண்டு வெளியான க்ரூயல் இன்டென்ஷன் படத்தில் இந்த இரு நடிகைகளும் கொடுத்த லெஸ்பியன் முத்தம், அந்த காலத்திலேயே, பல இளைஞர்கள் நெஞ்சை இரண்டாக பிளந்து இருந்தது.

பல வருடங்களாக நெருங்கிய தோழிகளாக இருந்து வரும் இவர்கள் தற்போதும் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

லெஸ்பியன் முத்தம்

லெஸ்பியன் முத்தம்

இயக்குநர்கள் ரோஜர் கும்ப்ளே மற்றும் ஸ்காட் ஸெயில் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான Cruel Intention படத்தில் லீடு ரோலில் நடித்திருந்த செல்மா பிளையர் மற்றும் சாரா மிச்சல் கெல்லர் ஆகிய இரு நடிகைகளும் அந்த படத்தின் ஒரு காட்சியில் உதடோடு உதடு வைத்துக் கொடுத்த ஹாட் லெஸ்பியன் முத்தம் அப்போதே சினிமா ரசிகர்களை அலற விட்டது.

முத்தம் கொடுக்க முடியல

முத்தம் கொடுக்க முடியல

நடிகை செல்மா பிளையரின் 48வது பிறந்தநாள், கடந்த ஜூன் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆறடி தூரத்தில் இருந்தும் உனக்கு முத்தம் கொடுக்க முடியாமல், மாஸ்க் போட்டு தவிக்கிறேன் என, எம்.டிவி விருது விழாவில் இரு நடிகைகளும், தங்களின் ஐகானிக் முத்தத்தை கொடுத்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.

மாஸ்க்குடன் முத்தம்

மாஸ்க்குடன் முத்தம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மாஸ்க் அணிந்த முகங்களாக இருப்பதால், இந்த பிறந்த நாளுக்கு உனக்கு எப்படி லிப் லாக் செய்யப் போகிறேன் என முதலில் புலம்பிய படி சாரா போட்ட போஸ்ட் வைரலானது. ஆனால், அவரிடம் இருந்து முத்தம் வாங்காமல் விடப் போவதில்லை என தீர்மானித்த பிளையர், மாஸ்க் அணிந்தபடி முத்தம் கொடுத்து அசத்தி உள்ளார். இருவரின் இந்த இணைபிரியா உறவை பார்த்து இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போயுள்ளனர்.

ஏகப்பட்ட முறை

ஏகப்பட்ட முறை

ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரித்து வரும் இந்த இரு நடிகைகளும், பல முறை தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில், பொது வெளிகள், ஹாலிவுட் நிகழ்ச்சிகள் என எங்கே சந்தித்துக் கொண்டாலும், ஒருவர் உதட்டை மற்றொருவர் பதம் பார்க்காமல் விட்டதில்லை. அந்த அளவுக்கு படு சூடான லிப் லாக் கிஸ்களை இருவரும் ஏகப்பட்ட முறை அடித்துள்ளனர்.

எப்படித்தான் எடுக்கப் போறாங்களோ

எப்படித்தான் எடுக்கப் போறாங்களோ

ஹாலிவுட் படங்களில் லிப் லாக் முத்தங்கள் இல்லாமல், எந்த ஒரு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் முடிவடைந்ததாக சரித்திரமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பல ஹாலிவுட் படங்களில் முத்த காட்சிகளும், உடலுறவு காட்சிகளும் இடம்பிடித்திருக்கும். கொரோனா பரவலுக்கு பிறகு, அதுபோன்ற காட்சிகளை எப்படித்தான் படமாக்க போகிறார்களோ என்ற குழப்பம் ரசிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X