மகளுக்கு விரைவில் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் செய்திருக்கும் அட்வைஸ் இதுதான்.. சூப்பர் அட்வைஸ்

சென்னை: சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கு சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. சாந்தினி போன்றே அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் டான் பிலிப்பும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மகள்களுக்கு சரண்யா செய்திருக்கும் அட்வைஸ் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களில் ஒன்று நாயகன். கமல்ஹாசன் - மணிரத்னம் - இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் போன்ற லெஜெண்டுகள் இணைந்த அப்படத்தில் நடித்து தனது கரியரை ஸ்டார்ட் செய்தவர் சரண்யா பொன்வண்ணன். அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. அதேபோல்தான் சரண்யாவும். இப்போதுவரை கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

அம்மாவாக சரண்யா: தனது கரியர் பீக்கில் இருந்தபோதே இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த அவர்; தனது இரண்டாவது இன்னிங்ஸை குணசித்திர நடிகையாக தொடங்கினார். அப்படி அவர் நடித்த ராம், களவாணி, கிரீடம் என ஏகப்பட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. கோலிவுட்டின் தவிர்க்க முடியாத அம்மா நடிகையாக மாறிவிட்டார் அவர்.

Saranya Ponvannan s Advice to Her Daughters about Marriage and Finding Husband
Photo Credit:

என்ன ஸ்பெஷல்: சரண்யா பொன்வண்ணனை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்தது மாதிரி இன்னொரு படத்தில் நடிக்காததுதான். அதேபோல் தன்னுடைய நடிப்பில் எதார்த்தத்தை மட்டுமே வெளிப்படுத்தும் அவரை பார்க்கும்போது; நமது வீட்டிலிருந்து ஒருவர் நடித்தால் எப்படி இருக்குமோ அதேபோன்ற நடிப்பை கொண்டுவந்துவிடுவார். இதனால்தான் அவர் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

மகள்களின் கரியர்: திரைத்துறையில் வெற்றிகரமாக சரண்யாவும், பொன்வண்ணனும் இருந்தாலும் அவர்கள் தங்கள் இரண்டு மகள்களையும் கேமராவுக்கு முன்பு நிறுத்தவில்லை. மாறாக அவர்கள் விருப்பப்பட்டபடி மருத்துவம் படிக்க வைத்தார்கள். அதன் விளைவாக இப்போது பெரிய மருத்துவர்களாக அவர்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இளைய மகள் சாந்தினிக்கும் டான் பிலிப் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

சரண்யாவின் பேட்டி: விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சரண்யா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கணவர் என்ன மொழி பேசுவார்; எந்த ஊர்க்காரர் என்றெல்லாம் கேட்பார்கள். உடனே நாமும் என்ன மொழி பேசுவார், என்ன ஊர் என்றெல்லாம் சொல்ல வேண்டும். இதுமாதிரி எதுவும் சொல்லாமல் அந்த மனிதன் நல்ல மனிதனா என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். அவர் நல்ல மனிதரா; மற்றவர்கள் முன்பு உன்னை நன்றாக நடத்துவாரா; அவரால் உனக்கு மதிப்பு உயருமா என்றுதான் பார்க்க வேண்டும். நான் என்னுடைய மகள்களிடம்கூட, 'நீங்கள் கணவரை தேடும்போதுகூட பணம் இருக்கா, படித்தவரா, வெள்ளையா இருப்பாரா என்றெல்லாம் பார்க்காமல் உனக்கு மரியாதை கொடுப்பாரா என்பதைத்தான் பார்க்க வேண்டும் என சொல்லியிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X