அவங்க என்னோட அம்மாடா.. சுடிதாரில் சூப்பர் டான்ஸ் போட்ட சரண்யா பொன்வண்ணன்.. தனுஷ் தாறுமாறு!

சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் மற்றும் தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என 2 படங்கள் வெளியாகின. இதில், டிராகன் படம் பிளாக்பஸ்டர் விமர்சனங்களை அள்ளி வருகின்றன. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தனுஷின் இயக்கத்துக்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அறிமுக நடிகரான பவிஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் நாள் வசூலே ஒரு கோடி ரூபாயை கடந்துள்ளது. சமீப காலமாக பல சிறிய படங்கள் இந்தளவுக்கு வசூலை குவிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

NEEK Dhanush Saranya Ponvannan

இந்த படத்தில் பவிஷுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் இணைந்து தனுஷ் நடனமாடி பவிஷுக்கு சொல்லித்தரும் வீடியோவை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.

நாயகன் நாயகி: மலையாள இயக்குநர் ஏ.பி. ராஜின் மகள் தான் சரண்யா. ஷீலா கிறிஸ்டினா எனும் அவரது பெயர் சரண்யாவாக தமிழ் சினிமாவில் மாறியது. முதல் படமே மணிரத்னம் இயக்கம் கமல்ஹாசன் ஹீரோ என நாயகன் படத்தின் நாயகியாக அறிமுகமானார். கருத்தம்மா படத்தில் பொன்வண்ணன் உடன் இணைந்து நடித்த நிலையில், அவருடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

NEEK Dhanush Saranya Ponvannan

54 வயதிலும் அம்மா: தமிழ் சினிமாவில் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், பரத் என பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் தனுஷின் அக்கா மகன் பவிஷுக்கும் 54 வயதில் அம்மாவாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பவிஷிடம் அவங்க என் அம்மாடா உனக்கு கொடுத்திருக்கேன் என தனுஷ் சொன்னதை எல்லாம் பேசியிருந்தார் சரண்யா பொன்வண்ணன். இந்நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யங்களை ஷேர் செய்துள்ளார்.

NEEK Dhanush Saranya Ponvannan

தனுஷ் சரண்யா பாண்டிங்: வேலையில்லா பட்டதாரி படத்தில் "அம்மா அம்மா நீ எங்கே அம்மா" என தனுஷ் பாடியும் அவருடன் இணைந்து நடித்ததையும் ரசிகர்களும் சரண்யா பொன்வண்ணனும் என்றுமே மறக்கமாட்டார்கள். பவிஷுடன் சரண்யா டான்ஸ் ஆடும் காட்சிக்கு ரிகர்சல் பார்க்கும் போது தனுஷ் சரண்யாவுடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். தனுஷ் எந்தளவுக்கு சரண்யா பொன்வண்ணன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து அவருடன் பாசத்துடன் பழகுகிறார் என்பதை பார்க்கவே ஹேப்பியா இருக்கு என தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சமீப காலமாக அம்மா கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் உள்ளிட்ட சில நடிகைகள் வந்தாலும் சரண்யா பொன்வண்ணன் தான் டாப் என கொண்டாடி வருகின்றனர்.

சுடிதாரில் டான்ஸ்: பொதுவாகவே சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்தாலே சேலை அணிந்து தான் நடித்து வந்தார். இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் அவர் சுடிதார் அணிந்து பவிஷ் உடன் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வயதிலும் செம ஆக்டிவாக இருக்காரே சரண்யா என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X