நிச்சயதார்த்தத்தில் மகளுக்கு நடந்த அந்த விஷயம்.. மெய் மறந்து ரசித்த சரண்யா பொன்வண்ணன்.. அவ்வளவு மகிழ்ச்சி
சென்னை: சரண்யா - பொன்வண்ணன் ஆகியோரின் இரண்டாவது மகளான சாந்தினிக்கு சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் அவர்களுக்கு நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சரண்யா. முதல் படமே கமல், மணிரத்னம் ஆகிய இரண்டு லெஜெண்டுகளோடு பணியாற்றும் வாய்ப்பை பெற்ற அவர்; அதில் தன்னுடைய திறமையை அசால்ட்டாக வெளிப்படுத்தினார். நாயகன் படம் பெற்ற மெகா வெற்றி சரண்யாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அதனை அவரும் சரியாக பயன்படுத்தி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து சரசரவென்று வளர்ந்தார்.
பொன்வண்ணனோடு திருமணம்: எப்படியும் பெரிய ஹீரோயினாக வலம் வருவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் 1995ஆம் ஆண்டே இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். பிள்ளைகள் பிறந்த பிறகு அவர்களை கவனிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தியதால் திரைத்துறையிலிருந்து பிரேக் எடுத்தார் சரண்யா பொன்வண்ணன்.

மீண்டும் வந்த சரண்யா: ஒருகட்டத்தில் மீண்டும் நடிக்க அவருக்கு ஆசை வர; ராம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அப்போதிருந்து இப்போதுவரை கோலிவுட்டில் பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டார். பல படங்களில் அம்மா ரோலில் நடித்தாலும் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் அவ்வளவு வேறுபாடு காட்டி நடிப்பது அவரது ஸ்பெஷல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மகளுக்கு நடந்த நிச்சயதார்த்தம்: தன்னுடைய இரண்டு மகள்களையும் மருத்துவத்துக்கு படிக்க வைத்தார் சரண்யா. தற்போது அவர்கள் பெரிய மருத்துவர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க சமீபத்தில்தான் இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர் டான் பிலிப் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது தனது மகள் சாந்தினிக்கு புடவை கட்டிவிட்ட பெண்ணை பார்த்து, 'நீங்கள் புடவை கட்டிவிட்ட பிறகு ஒல்லியாகிவிட்டது. உங்கள் வேலை நன்றாக இருப்பதோடு மட்டுமின்றி வேகமாகவும் இருக்கிறது. விரைவில் திருமணத்தில் சந்திக்கலாம்' என்றார். அதை சொல்லும்போது சரண்யாவின் முகம் முழுக்க மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தது.


Click it and Unblock the Notifications











