சரண்யா பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பு.. குவிந்த பிரபலங்கள்.. யார் யார் வந்தது தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகைகளில் ஒருவர் சரண்யா பொன்வண்ணன். ஏறத்தாழ அத்தனை ஹீரோக்க்ளுக்கும் அம்மாவாக நடித்துவிட்ட அவருக்கு; நிஜ வாழ்க்கையில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு சில வருடங்கள் முன்பு திருமணம் நடந்து முடிந்தது. அதனையடுத்து இரண்டாவது மகளான சாந்தினிக்கு கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி திருமணம் முடிந்தது. நேற்று சென்னையில் வைத்து ரிசப்ஷன் நடந்தது.
மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சரண்யா. அந்தப் படத்தில் கொஞ்ச நேரமே வந்திருந்தாலும் அவர் ஏற்றிருந்த ரோல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதை உணர்ந்து தனது நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதல் படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து ஹீரோயினாகும் வாய்ப்புகள் வந்தன. அவரும் அதை எற்று கிளாமர் எதுவும் காட்டாமல் நடித்துக்கொண்டிருந்தார்.
சரண்யா டூ சரண்யா பொன்வண்ணன்: சூழல் இப்படி இருக்க ஒரு படத்தில் பணியாற்றியபோது இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எனக்கு உன்னுடைய கால்ஷீட் 70 வருடங்கள் கிடைக்குமா என கேட்டு க்யூட்டாக பொன்வண்ணன் ப்ரோபோஸ் செய்ய; உடனே சரண்யாவும் சம்மதம் தெரிவித்தார். திருமணம் செய்துகொண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

இரண்டு பேருக்கு மட்டுமில்லை: திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் ஏகப்பட்ட படங்களில் கேரக்டர் ரோலை ஏற்றார். சொல்லப்போனால் நிஜ வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சரண்யா; ஸ்க்ரீனில் பலருக்கு தாயாக நடித்திருக்கிறார். விஜய், அஜித், தனுஷ் என எக்கச்சக்க நட்சத்திரங்களுடன் நடித்து கோலிவுட்டில் தவிர்க்க முடியாத கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மகள்களும் மருத்துவர்கள்: இதற்கிடையே தன்னுடைய மகள்களுக்கு மருத்துவம் படிக்க ஆசை வந்ததால் அவர்களை அதே வழியில் செல்ல அனுமதித்தார். இப்போது மூத்த மகள் பிரியதர்ஷினியும், இரண்டாவது மகள் சாந்தினியும் வெற்றிகரமான மருத்துவர்களாக வலம் வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு திருமணம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது மகளுக்கு டான் பிலிப் என்பவருடன் கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம் செய்து வைத்தார்.
பிரமாண்டமாக நடந்த வரவேற்பு: தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி நீலகிரி மாவட்டத்தில் சாந்தினிக்கும், டானுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் சென்னையில் நேற்று பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா,கார்த்தி, சசிகுமார் என பலரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதுதொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











