புது வாழ்க்கையை தொடங்கிய மகள்.. சரண்யா பொன்வண்ணன் கொடுத்த அட்வைஸ்!

சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினி அக்டோபர் மாதம் டானி பிலிப் பாபு என்பவருடன் ஊட்டியில் தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து 2ந் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ' இதையடுத்து, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.

மேலும், நடிகர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், தனுஷ், சசிகுமார், அருண்குமார்,ஜீவா, விஜய்சேதுபதி, சத்யராஜ், விஜயகுமார், சினேகா, பிரசன்னா, பிரபு, விக்ரம் பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், பார்த்திபன், நாசர், சரத்குமார், பாக்யராஜ், இளவரசு, தலைவாசல் விஜய், இயக்குநர்கள் மணிரத்னம், சேரன், கேஎஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saranya Ponvannan daughter reception

மகளுக்கு அட்வைஸ்: இரண்டு மகள்களுக்குமே திருமணத்தையும் முடித்திருக்கும் மகிழ்ச்சிகள் இருக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருமணம் குறித்து சரண்யா, பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உங்கள் கணவர் என்ன படித்து இருக்கிறார் ? உங்கள் கணவருக்கு என்னென்ன மொழி தெரியும்? எவ்வளவு சொத்து இருக்கு? என பலர் கேட்பார்கள். இவை எல்லாம் தேவையில்லாத ஒன்று, என் கணவர் நல்ல மனிதரா என்று தான் பார்க்க வேண்டும்.

நல்ல மனுஷனா: இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்றால், இதையெல்லாம் பார்க்காமல் ஒரு நல்ல மனிதரா, நல்ல மனுஷனா? நமக்கு மரியாதை கொடுப்பாரா? மற்றவர்களின் முன்பு உன்னை அழகாக நடத்துவாரா? உனக்கு அவமானம் வரும் படி நடந்து கொள்ளமாட்டாரா? அவர் தான் நல்ல மனுஷன்... அவர் தான் நல்ல புருஷன் இப்படி பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று சரண்யா பொன்வண்ணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X