நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை.. பிரபல இயக்குனர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

By

கொச்சி: நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும் பிரபல இயக்குனருமான ஏ.பி.ராஜ் காலமானார்.

Recommended Video

“Oviya-வ மட்டும் தான் ஞாபகம் வெச்சிருக்காங்க” Saranya Ponvannan | Vimal | Kalavani 2 Press meet

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ராஜ் அந்தோணி பாஸ்கர் என்ற ஏ.பி.ராஜ்.

1951 ஆம் ஆண்டில் இருந்து 1986 வரை மலையாளத்தில் 65 படங்களை இயக்கியுள்ளார். இதில் பல ஹிட் படங்களும் அடங்கும்.

மலையாள சினிமா

மலையாள சினிமா

ஆரம்பத்தில் சிங்களப் படங்களை இயக்கிய இவர், பிறகு மலையாள சினிமாவுக்கு வந்தார். கல்லியல்லா கல்யாணம் என்ற படம் மூலம் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமான இவர், பிறகு, மனசே நினக்கு மங்களம், கழுமரம், அக்னி சரம், கழுகன், அவகாசம், சூர்யவம்சன், சீமந்தபுத்ரன் உள்பட படங்களை இயக்கி இருக்கிறார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

தமிழில், துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
டேவிட் லீன் இயக்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் படமான த பிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என்ற போர் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஏ.பி.ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1957 ஆம் ஆண்டு வெளியானது. இந்த அனுபவத்தில்தான் அவர் படம் இயக்கத் தொடங்கினார்.

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக, உடல் நலமில்லாமல் இருந்த இவர், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. இயக்குனர் ராஜின் மனைவி சரோஜினி ஏற்கனவே மறைந்துவிட்டார். இவருக்கு ஜெயபால், மனோஜ் என்ற மகன்களும் சரண்யா பொன்வண்ணன் என்ற மகளும் உள்ளனர். சரண்யா பிரபல நடிகையாக இருக்கிறார். பல்வேறு படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இயக்குனர் ஏ.பி.ராஜின் மறைவை அடுத்து சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள இயக்குனர்கள் ஹரிஹரன், ஐவி சசி, பி.சந்திரகுமார், ராஜசேகரன் ஆகியோர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: saranya ponvannan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X