Saranya Ponvannan: ப்பா.. சரண்யா பொன்வண்ணனா இது.. ஜீன்ஸ் பேன்ட்டில் செம மாஸ்.. இளைய மகளை பாருங்க!

சென்னை: நடிகர் பொன்வண்ணன் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சரண்யா பொன்வண்ணன் ஹாலிடேவுக்காக குடும்பத்துடன் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தி வரும் சரண்யா பொன்வண்ணனை ரசிகர்கள் அதிகமாக சேலை அணிந்தே பார்த்து வந்திருப்பார்கள்.

Saranya Ponvannan shares her Amsterdam tour photos and she looking good in Jeans pant

ஆனால், திடீரென ஜீன்ஸ் சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து செம மாடர்னாக மாறிய புகைப்படங்கள் தற்போது வெளியான நிலையில், அதை பார்த்து வாவ் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நாயகன் ஹீரோயின்: 1987ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. மலையாளத்தில் 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.பி. ராஜின் மகள் தான் சரண்யா. நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சரண்யாவுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என இரு மகள்கள் உள்ளனர்.

Saranya Ponvannan shares her Amsterdam tour photos and she looking good in Jeans pant

நாயகன் படத்தைத் தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அன்று பெய்த மழையில், அஞ்சலி, தசரதன், கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த சரண்யா கடந்த சில ஆண்டுகளாக அம்மா நடிகையாக மாறி விட்டார்.

அம்மா நடிகையாக அசத்தல்: இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்து அம்மா நடிகையாக மாறினார் சரண்யா பொன்வண்ணன். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்களுக்கு அம்மா நடிகையாக வலம் வந்த சரண்யா பொன்வண்ணன் பரத்தின் எம் மகன் படத்தில் வேறலெவல் காமெடி நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்து இருந்தார்.

Saranya Ponvannan shares her Amsterdam tour photos and she looking good in Jeans pant

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதிக்கு அம்மாவாகவும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகவும் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு அம்மாவாகவும் நடித்து அம்மா நடிகைன்னாலே முதல் இடம் தனக்குத் தான் என்பதை பிடித்து விட்டார்.

ஜீன்ஸ் உடையில்: எப்போதுமே சேலை அணிந்து கொண்டு சினிமாவில் அம்மாவாக வலம் வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் ஆம்ஸ்டர்டாமுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

Saranya Ponvannan shares her Amsterdam tour photos and she looking good in Jeans pant

அதில், ஜீன்ஸ் சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து செம மாடர்னாக போஸ் கொடுத்துள்ள சரண்யாவை பார்த்து ரசிகர்கள் சூப்பர் மேடம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சரண்யாவின் இளைய மகள்: நடிகை சரண்யாவின் கணவர் பொன்வண்ணன் பார்க்க சசிகுமார் மாதிரி இருக்கிறார் என்றும் அவரது இளைய மகளை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட செம அழகா இருக்காரே என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Saranya Ponvannan shares her Amsterdam tour photos and she looking good in Jeans pant

நெதர்லாந்து நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சரண்யா பொன்வண்ணன் பல இடங்களில் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X