மகளின் கல்யாண புடவை.. தன் கையால் ஜாக்கெட் தைத்து அசத்திய சரண்யா பொன்வண்ணன்.. என்ன மாடல் தெரியுமா?

சென்னை: சரண்யா மற்றும் பொன் வண்ணணின் இளைய மகள் சாந்தினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், சரண்யா தனது மகளின் திருமணத்திற்கு தன் கையால் ஜாக்கெட் தைத்து அசத்தி உள்ளார்.

நாயகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சரண்யா, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, சிவப்பு மாலி, அன்று பெய்த மழை, சகலகலா சம்மந்தி போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர்,1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Saranya Ponvannan daughter
Photo Credit:

நடிகை சரண்யா: சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த சரண்யா, ஜீவா நடிப்பில் வெளியான ராம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், விஐபி, களவாணி, ஒரு கல் ஒரு கண்ணடி என அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அனைத்து நடிகர்களும் அம்மாவாக சரண்யாவை கொண்டாடி வருகிறார்.

திருமண ஜாக்கெட்: இந்நிலையில்,சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கும் டானின் என்பவருடன் நிச்சயதார்த்தம் ஊட்டியில் நடந்தது. அந்த நிச்சயத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த போட்டோவை சரண்யா இணையத்தில் பதிவிடவே இல்லை. சரண்யா மகளுக்கு நிச்சயம் நடந்தது மேக்கப் கலைஞர் மூலம் ஒரு சில போட்டோக்கள் வெளியான போது தான் சரண்யா மகளின் நிச்சயதார்த்த விஷயமே பலருக்கு தெரிந்தது. மகளுக்கு நிச்சயமான மகிழ்ச்சியில் இருக்கும் சரண்யா, அடுத்த கட்டமாக திருமண வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Saranya Ponvannan daughter
Photo Credit:

அசத்திய சரண்யா: ஒரு பக்கம் படப்பிடிப்பு, பத்திரிகை கொடுப்பது என பல வேலைகள் இருந்தாலும், மகளின் திருமண ஜாக்கெட்டை தனது கைப்பட தைத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதுவும் பேக் ஓபன் வைத்து, நெட் வைத்து மிகவும் மார்ட்டனாக ஜாக்கெட்டை தைத்துள்ளார். தனியாக டைலரிங் கிளாஸ் நடத்தி வரும் சரண்யா, ஆரம்பத்தில் இருந்தே தனது இரண்டு மகளுக்கும் அனைத்து உடைகளையும் தன் தையல் தான் தைத்து கொடுத்து வந்துள்ளார். அதையே இப்போதும், திருமணத்திலும் செய்து அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X