10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி

By Siva

Recommended Video

சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி- வீடியோ

சென்னை: இந்த மூஞ்சிய எல்லாம் யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட சரண்யா விஜய் சேதுபதி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அவர் விழாவில் கூறியதாவது,

முகம்

முகம்

நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சேதுவுடன் நடிக்கிறேன். தென்மேற்கு பருவக்காற்று தான் நாங்கள் ஒன்றாக நடித்த முதல் படம். அப்போ சேது என்னிடம் வந்து என் முகமெல்லாம் யாருக்காவது பிடிக்குமாம்மா என்று கேட்டது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

க்யூட்

க்யூட்

முகம் பிடிக்குமா என்று ஏன் கேட்கிறீர்கள்? எவ்வளவு லட்சணமா, க்யூட்டா, குழந்தை மாதிரி இருக்கிறது உங்கள் முகம் என்று நான் சொன்னேன். அப்படி எல்லாம் கேட்காதீங்க என்றேன்.

வெற்றி

வெற்றி

உங்களை மாதிரி இருக்கும் நிறைய பேர் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்றேன். பார்க்கலாம்மா என்று பயந்து, யோசித்துக் கொண்டிருந்த ஆளுகிட்ட இப்ப நான் சம்பளம் வாங்கி நடித்திருக்கிறேன்.

சம்பளம்

சம்பளம்

யாருக்காவது பிடிக்குமா என்று கேட்ட சேது தற்போது தயாரிப்பாளராகி அவரிடம் சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். இதை விட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமே இல்லை. ஒரு குழந்தையின் வளர்ச்சியை பார்ப்பது போன்று சந்தோஷமாக உள்ளது. தன்னம்பிக்கை, விடா முயற்சி, நல்ல குணத்தால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றார் சரண்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X