திறமை இருந்தால்.. வெற்றி பரிசு நிச்சயம்.. சரண்யா ரவி !

சென்னை : குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா ரவி, திறமை இருந்தால் வெற்றியை நிச்சயம் அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

பல ஹீரோயின்கள் திரைபடங்களில் கிளாமராக நடிப்பதும், சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதும் நாம் பார்த்திருப்போம். ஆனால், சரண்யா ரவி குறும்படத்திலேயே அத்தகைய சவால் நிறைந்த கதாபாத்திரத்தை தேர்வு நடித்து அசத்தி இருப்பார் நடித்திருப்பார்.

 Saranya Ravi says success is sure if you have talent

வெள்ளையாக இருக்கும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாய்ப்பு என்பதை உடைத்து பல முன்னணி நடிகைகள் பல தடவை சினிமாவில் சாதித்து உள்ளனர். அந்த வகையில் சாதாரணமான, எளிமையான தோற்றத்தில் இருந்து பல படங்களில் நடித்தது சரண்யாவுக்கு பெருமையும் பாராட்டுக்குரியது. இவர் நடித்த குறும்படத்தை பட்டியலிட்டால் பட்டியல் நீளம் தான். "கதையின் நாயகி , கனவுகள் ஆயிரம், தவறி பிறந்த விந்துகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதில் கிளாமர் மற்றும் ஹியூமர் கதாபாத்திரங்களும் அடங்கும்

கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமலே இருக்கின்றனர். ஆனால் நடிகை, நடிகர்களையோ அன்றாடம் அவர்கள் செய்யும் வேலைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர் .

பல ஹீரோயின்கள் போட்டோ ஷூட்ஸ் நடத்தி தன் புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவிட்டு தன் ரசிகர்களை தன்னிடம் இருந்து இடைவெளி இல்லாமல் பார்த்து கொள்கின்றனர். அந்த வகையில் குறும்படத்தில் நடிப்பவர்களும் சினிமா சான்ஸ்க்காக போட்டோ ஷூட்ஸ் நடத்தி வருகின்றனர். தன் போட்டோக்கள் மூலம் அவர்களது புது முயற்சிக்கு அச்சாணி போட்டு வருகின்றனர்.

 Saranya Ravi says success is sure if you have talent

சரண்யா நூறுக்கும் மேற்பட்ட வித்தியாசமான குறும்படத்தில் நடித்து நல்ல நடிகை என்று பேர் பெற்று உள்ளார். குறிப்பாக எமோஷனலாக நடிப்பதில் கைதேர்ந்தவர். இவரது நடிப்பை பார்த்து பல முன்னணி இயக்குனர்கள் சினிமாவில் சிறு சிறு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளிவந்த ஜீவா நடித்த சீறு மற்றும் தினேஷ் நடித்த இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்ததால் சரண்யாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இன்னும் நல்ல நல்ல வித்தியாசமான கதாபாத்திரத்திற்க்காக சரண்யா காத்துக்கொண்டிருக்கிறார்.

 Saranya Ravi says success is sure if you have talent

நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும், வெற்றி பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி தான் சரண்யாவுக்கு பலம். நல்ல திறமைக்கும் திறமைசாலிகளுக்கும் இந்த சினிமா உலகம் கண்டிப்பாக வெற்றியை பரிசாக கொடுக்கும் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X