»   »  27ல் பதவியேற்கிறார் சரத்!

27ல் பதவியேற்கிறார் சரத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்தலைவராக வருகிற 27ம் தேதி நடிகர் சரத்குமார் பதவியேற்கவுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள்தேர்தலிலும் சரத்குமார் அணியே வெறறி பெற்றுள்ளது.

துணைத் தலைவர்களாக மனோரமா, விஜயக்குமாரும், பொதுச்செயலாளராக ராதாரவியும், பொருளாளராககே.என்.காளையும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சரத் அணியைச் சேர்ந்த 24 பேர் செயற்குழுஉறுப்பினர்களாக தேர்வு பெற்றுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் வருகிற 27ம் தேதி பதவியேற்கின்றனர். அன்று காலை 10மணிக்கு பொதுக்குழுக்கூட்டம்நடைபெறுகிறது. அப்போது தற்போதைய தலைவர் விஜயகாந்த், புதிய தலைவர் சரத்குமாரிடம் பொறுப்புகளைஒபபடைக்கிறார். இதையடுத்து புதிய தலைவராக சரத்குமார் பொறுப் பேற்றுக்கொள்கிறார்.

பொதுக்குழுக் கூட்டம மற்றும் பதவியேற்பு விழாவையொட்டி நடிகர் அலெக்சின் மாஜிக் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil