Sarath Babu: சரத்பாபுவால் வாழ்க்கையை தொலைத்த பிரபல நடிகை... ரகசியமாக உதவிய இயக்குநர்...
ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சரத் பாபு.
கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வைரலாகின.
தற்போது சரத்பாபுவின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் குறித்த ஒரு செய்தி ட்ரெண்டாகி வருகிறது.

சரத்பாபுவால் வாழ்க்கையை தொலைத்த நடிகை:தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சரத்பாபு. நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, ஆளவந்தான், பாபா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக பெரும்பாலான படங்களில் ரஜினியின் நண்பராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சரத்பாபு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் சரத்பாபு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது வதந்தி என பின்னர் தெரியவந்தது. மேலும் சரத்பாபுவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்திருந்தனர்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் சரத்பாபுவின் பிளாஷ்பேக் ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது 70, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரமா பிரபா, தன்னைவிட 5 வயது குறைந்த சரத்பாபுவை காதலித்துள்ளார். சரத்பாபுவும் அவருடன் 14 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். ஆனால், ரமா பிரபாவிடம் இருந்த சொத்துகளை சரத்பாபு ஏமாற்றி வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது
ரமாபிரபா வயது குறைந்த சரத்பாபுவை விரும்பியதால் இன்று தள்ளாத வயதில் தனியாக வசித்து வருகிறாராம். சென்னையின் மிக முக்கியமான ஏரியாவில் விலை மதிப்புமிக்க சொத்துக்கு உரிமையாளராக இருந்த ரமா பிரபா, சரத்பாபுவிடம் தனது சொத்துகள் முழுவதையும் இழந்துள்ளார். ஆனால், இவ்வளவு நடந்தும் சரத்பாபுவுக்கு உடல்நலமில்லை என தெரிந்த ரமா பிரபா ரொம்பவே தவித்து போனாராம்.

மேலும், ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தன்னுடன் இணைந்திருந்த சரத்பாபு, பெரிய நடிகரானதும் ஒதுங்கி விட்டதாக ரமா பிரபா தெரிவித்துள்ளார். தன்னை விட 5 வயது குறைந்த சரத் பாபுவை உருகி உருகி காதலித்த ரமா பிரபாவுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. சரத்பாபுவும் ரமா பிரபாவும் இறுதியாக பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இந்நிலையில், சரத்பாபுவால் அனைத்தையும் இழந்த நடிகை ரமா பிரபாவுக்கு தெலுங்கு இயக்குநர் ஒருவர் ரகசியமாக உதவியுள்ளார். தமிழில் வெளியான பத்ரி, தம், எம்.குமரன் S/o மகாலக்ஷ்மி, போக்கிரி படங்களின் தெலுங்கு ஒரிஜினல் வெர்ஷனை இயக்கியவர் பூரி ஜெகன்நாத். இவரது முதல் படமான பத்ரி தெலுங்கு வெர்ஷனில், நாயகியின் பாட்டியாக நடித்தவர் ரமா பிரபா.
ரமா பிரபா நடிக்க வாய்ப்புகள் அமையாமல் ரொம்பவே கஷ்டத்தில் இருந்துள்ளார். மேலும், சரத்பாபுவையும் பிரிந்து சொத்துக்களையும் இழந்திருந்த நேரம் அது. அப்போது தனது பத்ரி படத்தில் 5 நாட்கள் மட்டுமே ரமா பிரபாவை நடிக்க வைத்துள்ளார் பூரி ஜெகன்நாத். அதன் பின்னர், ரமா பிரபாவின் போன் நம்பர், அட்ரஸ் வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பிவிட்டாராம்.

சொத்துக்களை இழந்த ரமா பிரபாவும் ஹைதராபாத்தை காலி செய்துவிட்டு மதனப்பள்ளி என்ற ஊரில் தனது தம்பியுடன் வீடு கட்டி வசித்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் 20,000 ரூபாய் கிரடிட் ஆகியுள்ளது. இது ஒவ்வொரு மாதம் தொடரவே ரமா பிரபாவுக்கு இந்தப் பணத்தை யார் அனுப்புகிறார்கள் என சந்தேகம். இறுதியாக இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் தனக்கு ஒவ்வொரு மாதமும் 20000 ரூபாய் பணம் அனுப்புவது தெரியவந்துள்ளது. 2000ம் ஆண்டு முதலே மாதம் தவறாமல் பணம் அனுப்பியுள்ளார் பூரி ஜெகன்நாத். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











