For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சார்பட்டா படத்தில் சரத்குமாரை கவர்ந்த கதாபாத்திரம் இவர்தானாம்... புகழ்ந்து தள்ளிவிட்டார்!

  |

  சென்னை : இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியாகி திக்கெங்கும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது சார்பட்டா பரம்பரை திரைப்படம்.

  நடிகர் ஆர்யா இதில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருக்க டான்சிங் ரோஸ், வேம்புலி, ரங்கன் மாஸ்டர்,கௌதமன், பெரியம்மா, கெவின் டாடி, பாக்யம் என சார்பட்டா பரம்பரையை திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

  மாற்றப்பட்ட லொக்கேஷன்...வெளிநாடு பறக்கும் அஜித்... அடுத்தடுத்து வரும் வலிமை அப்டேட் மாற்றப்பட்ட லொக்கேஷன்...வெளிநாடு பறக்கும் அஜித்... அடுத்தடுத்து வரும் வலிமை அப்டேட்

  நடிகர் சூர்யா முதல் கார்த்தி வரை பல நடிகர் நடிகைகள் திரைப் பிரபலங்கள் சார்பட்டா பரம்பரை படத்தை பற்றி புகழ்ந்து பேசி இருக்கையில் நடிகர் சரத்குமார் சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஒருவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  சென்னையை காட்டாத விதத்தில்

  சென்னையை காட்டாத விதத்தில்

  தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் படங்களாக உள்ளது. அட்டக்கத்தி வெளியான பின்பு இவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் சென்னையை காட்டாத விதத்தில் மிகவும் புதுமையாக இருக்க அதன் பிறகு சூப்பர் ஸ்டாரை அடுத்தடுத்து இயக்க வாய்ப்புகள் கிடைத்தது.

  உடம்பை கட்டுமஸ்தாக

  உடம்பை கட்டுமஸ்தாக

  அந்த வகையில் கபாலி மற்றும் காலா உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிகாந்த், பா ரஞ்சித் கூட்டணியில் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதன்பிறகு பல திரைப்படங்களை தயாரித்து வந்த இயக்குனர் பா ரஞ்சித் வடசென்னையின் ஆஸ்தான விளையாட்டுகளில் ஒன்றான குத்துச் சண்டையை மையப்படுத்தி சார்பட்டா பரம்பரை என்ற படத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் இயக்கி வந்தார். இதில் நடிகர் ஆர்யா கபிலன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்க இதுவரை இல்லாத அளவிற்கு உடம்பை கட்டுமஸ்தாக உருவாக்கி குத்துச்சண்டை வீரருக்கே உரித்தான லுக்கில் மாறி ரசிகர்களை அசர வைத்தார்.

  பாராட்டு மழையில்

  பாராட்டு மழையில்

  திரையரங்குகளில் வெளியாக இருந்த சார்பட்டா பரம்பரை கொரோனா சூழ்நிலை காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் சென்ற வாரம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று ரசிகர்களை தொடர்ந்து திரைப்பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. தமிழில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி வெளியாவதால் அதிகபட்ச பாராட்டுக்கள் ஹீரோவை சென்றடையும் ஆனால் சார்பட்டா திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செதுக்கியுள்ளார் பா ரஞ்சித்.

  Recommended Video

  Actor Kalaiarasan Reveals Sarpatta Secret | Arya | Pa.Ranjith
  டான்சிங் ரோஸ்

  டான்சிங் ரோஸ்

  கபிலன், வேம்புலி,ரங்கன் மாஸ்டர், டான்சிங் ரோஸ், கௌதமன், கெவின் டாடி, மாரியம்மா ,பாகியம், வெற்றிச்செல்வன்,ராமன், தனிகா, மீரன்,மெஸ்ஸியம்மா,மாஞ்சா கண்ணன், டைகர் கார்டன் தங்கம் மற்றும் பூசாரி என நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்றுள்ள இதில் குறிப்பாக டான்சிங் ரோஸ் ரோலில் நடித்திருந்த சபீர் ரசிகர்களின் ஃபேவரிட் நாயகனாக இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளார்.

  நடிகர் சரத்குமார் பாராட்டு

  நடிகர் சரத்குமார் பாராட்டு

  டான்ஸ் ஆடிக் கொண்டே குத்து சண்டை செய்யும் பாக்சர் டான்சிங் ரோஸாக சில நிமிடங்கள் மட்டுமே வந்திருந்தாலும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் சபீர் நடித்துள்ளார். ஏற்கனவே சபீரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து தள்ளி உள்ள நிலையில் இப்பொழுது நடிகர் சரத்குமாரும் பாராட்டிப் பேசியுள்ளார். சபீர் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட கடும் பயிற்சிகள், டெடிகேஷன் மிகப் பெரியது. இயக்குனர் பா. ரஞ்சித் மிகச்சிறந்த படத்தை கொடுத்துள்ளார். லீட் ரோலில் நடித்திருந்த ஆர்யாவுக்கும் படக்குழுவுக்கும் மிகப் பெரிய பாராட்டுக்கள். என டான்சிங் ரோஸ் சபீரை நடிகர் சரத்குமார் பாராட்டி பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  English summary
  Actor Sarath Kumar has praised Sarpatta Parambarai movie team for their wonderful performance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X