மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் புதிய படம்!
அரசியல், சினிமா என இரட்டை சவாரியைத் தொடரும சரத்குமார், இப்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
தமிழ், மலையாளத்தில் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகும் புதிய படம் ‘நீ நான் நிழல்'. தமிழ், மலையாளத்தில் இருமொழிப் படமாக உருவாகியுள்ளது. திரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஜான் ராபின்சன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அகத்தியனிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இந்த வார இறுதியில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘சண்டமாருதம்' என்ற படத்திலும் சரத்குமார் நடித்து வருகிறார்.
இதில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சரத்குமார், இப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் 6 பேக் வைத்து நடிக்கப் போகிறாராம் சரத்.
மிஷ்கின் தற்போது ‘பிசாசு' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை பாலா தயாரித்து வருகிறார். சரத்குமாரின் ‘சண்டமாருதம்', மிஷ்கினின் ‘பிசாசு' படங்கள் முடிந்தபிறகு, இந்த புதிய பட அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications











