பாகிஸ்தான் மீது குண்டு போட தேதி குறித்த விஜயகாந்த் மகன்.. கொம்பு சீவி ரிலீஸ் தேதி சொல்லிட்டாங்க!
சென்னை: இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன்-காமெடி படம் கொம்பு சீவி. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வெளியானது. செம காமெடியாகவும் அதேநேரத்தில் ஆக்ஷனாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் பலரது கவனத்தை ஈர்த்தது. ரசிகர்கள் பலரும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வியை கேட்டு வந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தின் டைட்டில், இயக்குநர் சரத் - சண்முக பாண்டியன் கூட்டணி என ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் டீசர் மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதாவது, "மொத்தம், 1 நிமிடம் 33 நொடிகளுக்கு இந்த டீசர் வெளியிடப்பட்டது. சரத்குமார் ரொக்கப் புலி என்ற கதாபாத்திரத்திம். சண்முக பாண்டியன் பாண்டி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். டீசரின் தொடக்கமே, சரண்டர் ஆனவர்களை நாங்கள் அடித்ததில்லை, சண்டைக்கு வந்தவர்களை நாங்கள் சரண்டர் ஆக விட்டதில்லை என்ற அடாவடி டயலாகுடன் இருந்ததே அடடே அருமை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.

காமெடி: அதேபோல், டீசரில் இடம் பெற்ற மற்றொரு டயலாக் மேலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதாவது, " சரத்குமாரும் சண்முக பாண்டியனும் தாங்கள் இருவரும் வெடிகுண்டு தயாரித்ததாகவும், அதை பாகிஸ்தான் மீது வீசுவதற்காக தான் தயாரித்தோம் எனவும், இந்த குண்டை பாகிஸ்தான் மீது போடத்தான் தயாரித்தோம் என்றும் நீதிமன்றத்தில் கூறும் காட்சி உள்ளது. மேலும், இன்றைக்கு காஷ்மீர் மீது குண்டு போட்டவர்கள் நாளை காமக்கா பட்டியில் குண்டு போட்டால் என்னங்க செய்யறது என்றும் கேள்வி எழுப்புவது குபீர் சிரிப்பை வரவைக்கும் டயலாக்காக உள்ளது.
ரிலீஸ் தேதி: படம் எப்போது வெளியாகும் என்ற ஆவல் படத்தின் டீசர் வெளியானபோதே, ரசிகர்கள் மத்தியில் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. படம் ரிலீஸ்க்கு தயாராக தான் உள்ளது என்ற தகவல்கள் உலா வந்தாலும், படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யாமலே இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டு இறுதியில் படம் வெளியாகி செம காமெடி ட்ரீட் கொடுக்கவுள்ளது என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











