twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த் Vs

    By Staff
    |

    சென்னை:

    எம்பிகள் மீது புகார் கூறியது தொடர்பாக விஜயகாந்துக்கு திமுக எம்பி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணி எம்பிகளை நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார். வெள்ள நிவாரணபணிகளில் அவர்கள் நடவடிக்கைகளை குறை கூறியதுடன் வாழப்பாடி ராமமூர்த்தியை போல் எம்பி பதவியை ராஜினாமாசெய்யாதது ஏன் என்றும் கேள்வி விடுத்தார்.

    திமுக தலைவர் கருணாநிதியையும் மறைமுகமாக சாடினார். இதற்கு திமுக எம்பியும், நடிகருமான சரத்குமார் கண்டனம்தெரிவித்துள்ளார்.

    விஜயகாந்த்தை கண்டித்து சரத்குமார் கூறியதாவது:

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 40 தமிழக எம்பிகளும் என்ன செய்தார்கள் என்று விஜயகாந்த் கேட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் நானும் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வெள்ள நிவாரணம் பற்றி பேசி உள்ளோம். ஆனால் வோல்கர்கமிட்டி பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் பாஜகாவினர் தடுத்து வந்தனர்.

    இருந்தாலும் தமிழக வெள்ளச் சேதத்தை பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக எம்பிகள் தர்ணாபோராட்டம் நடத்தியுள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் தருவதாக விஜயகாந்த் அறிவித்தார். அந்தபணத்தை பிரதமரிடமோ, கவர்னர், முதலமைச்சர் யாரிடமாவது கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும்.

    நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட விஜயகாந்துக்கு தெரியவில்லை. அவரது பேச்சுக்கள் அவருக்கு நாட்டு நடப்புதெரியவில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறினார்.

    அணி திரளும் நடிகர்கள்:

    இதற்கிடையே நடிகர் சங்கத் தலைவர் பதவியை விடாமல், அரசியல் தலைவர் என்ற போர்வையையும் புதிதாக போர்த்திக்கொண்டு விஜயகாந்த் வலம் வரத் தொடங்கியிருப்பதால் சில முன்னணி நடிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவருக்குஎதிராக பகிரங்கமாக கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

    நடிகர் சங்கத் தலைவராக உள்ள விஜயகாந்த், இரண்டாவது முறையாக அப்பதவியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் சிலமாதங்களுக்கு முன்பு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய அரசியல் கட்சியையும் தொடங்கினார்.

    அரசியல் தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்தாலும், நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றுவிஜயகாந்த் அறிவித்திருந்தார். அரசியலில் தீவிரமாக உள்ள சில நடிகர்கள் ஏற்கனவே நடிகர் சங்க முக்கிய பொறுப்புகளிலும்இருப்பதால், தான் தலைவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

    ஆனால் தற்போது சிக்கல் எழும் போலத் தெரிகிறது. காரணம் விஜயகாந்த்தின் சமீபத்திய நடவடிக்கைகளால் நடிகர் சங்கப்பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னணி நடிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இந்த புலம்பல் சமீபத்தில்நடந்த நடிகர் சங்க ரகசியக் கூட்டத்தில் எதிரொலித்ததாம்.

    ரகசிய கூட்டம்:

    நடிகர் சங்க நிர்வாகிகளின் திடீர் ரகசியக் கூட்டம் விஜயகாந்த் இல்லாமலேயே சமீபத்தில் கூட்டப்பட்டதாம். இதில் பொதுச்செயலாளர்களான சரத்குமார், நெப்போலியன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் நடிகர் சங்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்மணிமண்டபப் பணிகள், சங்கத்திற்குப் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப்பேச்சு எழுந்துள்ளது.

    குறிப்பாக சிவாஜி மணிமண்டபம் கட்டுவதில் தலைவர் விஜயகாந்த் அக்கறையே காட்டவில்லை என்று பல முன்னணிநடிகர்கள் குறைபட்டுக் கொண்டனராம். அத்தோடு சங்கத்திற்குப் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான திட்டம் அப்படியேபாதியில் நிற்கிறது என்று சிலர் குறைபட்டுள்ளனர்.

    இத்தனை குழப்பத்திற்கும் காரணம், விஜயகாந்த் தான் என்று பலர் பகிரங்கமாகவே கூறியுள்ளனர். மேலும், கட்சி தொடங்கியபின்னர் அதுதொடர்பாக மட்டுமே விஜயகாந்த் தீவிரமாக செயல்படுவதாகவும், சங்க விவகாரங்களில் அவர் அதிகம் அக்கறைகாட்டுவதில்லை என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சங்கமா? அரசியலா?:

    கூட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமாரும், மற்ற நடிகர்களின் கருத்துக்களை ஆமோதித்துப் பேசியதாக தெரிகிறது. விஜயகாந்த்ஏதாவது ஒரு பதவியில் இருக்கட்டும், சங்கமா, அரசியலா என்பதை அவர் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும்என்றும் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சரத்குமார், நெப்போலியன் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் கூட அவர்கள் தீவிரமாக அதில் ஈடுபடுவதில்லை. சங்கப்பணிகளில் முழு அக்கறை காட்டுகிறார்கள், நடிகை குஷ்பு விவகாரத்தில் கூட சரத்குமார், குஷ்புவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.ஆனால் விஜயகாந்த்தோ, அவரைக் கைகழுவி விடுவது போல நடந்து கொண்டார் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    படு சூடாக நடந்த அந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்துக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும், அடுத்தமுறை விஜயகாந்த் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டால் நிச்சயம் அனல் பறக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X