விவாகரத்து வழக்கு: நடிகர் சரத்பாபு, மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜர்

By Shankar

Sarath Babu
சென்னை: விவாகரத்து வழக்கில் நடிகர் சரத்பாபுவும் அவர் மனைவி சினேகலதாவும் நேற்று நேரில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

சென்னை கோபாலபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சினேகலதா (வயது 60). இவர் மறைந்த நடிகர் நம்பியாரின் மகள்.

இவர் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் விவாகரத்து மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், எனக்கும், கோவிந்த மேனன் என்பவருக்கும் 11.12.68 அன்று திருமணம் நடந்தது. பின்னர் பிரிந்துவிட்டோம்.

இந்த நிலையில் சத்தியநாராயணன் தீட்சித்தை (62) (நடிகர் சரத்பாபு) அவரது 37-வது வயதில் சென்னை போர்ட் கிளப்பில் சந்தித்தேன். பின்னர் 2.7.90 அன்று ஓட்டல் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டோம். தற்போது அவரால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. மனரீதியாக என்னை துன்புறுத்துகிறார். எனவே அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். அவருக்குள்ள ரூ.20 கோடி சொத்தில் உள்ள எனது பங்கை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு 3-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி சாந்தகுமாரி முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. சரத்பாபு மற்றும் சினேகலதா ஆகியோர் ஆலோசனைக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று 2 பேரும் ஆலோசனைக்குழு முன்பு ஆஜரானார்கள்.

அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு நீதிபதி முன்பு கொண்டு செல்லப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு வருகிற ஜுலை 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X