Sarathkumar: சரத்குமாரின் முதல் மனைவி இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..? எல்லாம் அந்த அனுபவம்!

சென்னை: புலன் விசாரணை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த அவர், தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

சரத்குமார் தனது முதல் மனைவியை பிரிந்து தற்போது ராதிகா உடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சரத்குமாரின் முதல் மனைவி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Sarathkumar: Actor Sarathkumars first wife runs a foundation for women

சரத்குமாரின் முதல் மனைவி இப்போது...: 1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை படத்தில் விஜயகாந்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரத்குமார். பத்திரிகையாளராக வேலைப் பார்த்து வந்த அவர், சினிமாவில் அறிமுகமான புதிதில் சின்ன சின்ன கேரக்டரில் மட்டுமே நடித்து வந்தார். 1992ல் வெளியான சூரியன் திரைப்படம் சரத்குமாருக்கு முன்னணி ஹீரோ என்ற அடையாளத்தை கொடுத்தது.

அதன்பின்னர் ஏராளமான படங்களில் நடித்த சரத்குமார், தயாரிப்பாளர்களின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்த சரத்குமார், பொன்னியின் செல்வன், வாரிசு, போர் தொழில் படங்கள் மூலம் சூப்பராக கம்பேக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் கமிட்டாகியுள்ளார் சரத்குமார்.

சினிமா கேரியரில் உச்சம் தொட்ட சரத்குமார், தற்போது நடிகை ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார். இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். முன்னதாக சாயா என்பவரை திருமணம் செய்திருந்தார் சரத்குமார். 1984ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சரத்குமார் - சாயா தம்பதியினருக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி. ஆனால், சரத்குமாரும் சாயாவும் 2000ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

இந்நிலையில், சாயா தேவி தற்போது தன் மகள் வரலட்சுமி சரத்குமாருடன் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டாத சாயா தேவி சத்தமே இல்லாமல் ஒரு சிறப்பான சேவை செய்து வருகிறாராம். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்த சாயா, அவருக்கும் சரத்குமாருக்கும் விவாகரத்து ஆனது பற்றியும் பகிர்ந்துள்ளார். இருவரும் விவாகரத்து பெற்று பிரியும் போது வரலட்சுமி சிறு குழந்தையாக இருந்தார்.

அவருக்கு அப்பா வேண்டுமா அல்லது அம்மா வேண்டுமா என கேட்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் குழந்தைக்கு தாய் தந்தை இருவரும் முக்கியம் தன். விவாகரத்து செய்த பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். நானும் அந்த பிரச்சினைகளை கடந்து வந்தேன் என்பதால் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பல பெண்கலுக்கு உதவி வருவதாக சாயா தேவி கூறியுள்ளார். அந்த அறக்கட்டளையை தனது மகள் வரலட்சுமி தான் துவங்கியதாகவும் சாயா தேவி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X