நெருங்கும் திருமணத் தேதி.. திருமணத்திற்கு கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சரத்குமார்!

சென்னை: வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை இன்று சரத்குமார் குடும்பத்தினர் நேரடியாக நடிகர் கமலஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினர். நடிகை வரலக்ஷ்மியின் திருமணம் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பில் கலந்து கொள்வதற்காக அனைவருக்கும் நடிகர் சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

சரத்குமார் மற்றும் சாயதேவி தம்பதிகளின் மகளான வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் சிம்புக்கு ஜோடியாக அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மொழியை தாண்டி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

Varalakshmi Sarathkumar Nikolai Sachdev

வரலட்சுமி சரத்குமார்: கதையின் நாயகியாகவும் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லி ஆகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தையும் தென் இந்திய சினிமாவில் பிடித்துள்ளார். அண்மையில், இவர் நடிப்பில், வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

நிச்சயதார்த்தம்: படங்களில் பிஸியாக நடித்து வந்த வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபரான நிகோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15வயதில் பெண் இருக்கும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தொழிலதிபரான நிகோலய் ஆர்ட் கேலரி வைத்து இருக்கிறார். அவரின் அப்பா தொடங்கிய அந்த கேலரியை, அப்பாவின் மறைவிற்கு பிறகு தனது16 வயதில் இருந்து பிசினஸை கவனித்து வருகிறார்.

Varalakshmi Sarathkumar Nikolai Sachdev

நேரில் அழைப்பிதழ்: நடிகை வரலக்ஷ்மியின் திருமணம் அடுத்த மாதம் ஜூலை 2-ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற

உள்ளதாகவும்பின்னர்லீலாபேலஸில்திருமணவரவேற்புநடைபெறும்என்கூறப்பட்டது. இதைதொடர்ந்துதிருமண

பத்திரிக்கைவைப்பதில்பிஸியாகஇருக்கும்சரத்குமார்குடும்பத்தினர், சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்தைஅவரதுஇல்லத்தில்

சந்தித்து அழைப்பு கொடுத்தனர். இதையடுத்து, உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

அதன் பின் ராதிகா, வரலட்சுமி கனிமொழியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X