வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எப்போ தெரியுமா?.. சரத்குமார் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை: வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இன்று நடைபெறும் நிலையில், நாளை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என சரத்குமார் அறிவித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ்வுக்கு ஜூலை 2ம் தேதியான இன்று திருமணம் கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்த நிலையில், அவர்கள் பங்கேற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நாளை மாலை நடைபெறுகிறது.

Varalaxmi Sarathkumar Nicholai Sachdev Varalaxmi Sarathkumar Marriage Trisha

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அதன் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக நாளை மறுதினம் ஜூலை 4ம் தேதி வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் மணமக்களுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்றும் நடிகர் சரத்குமார் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் திருமணம்: நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் ஜூலை 2ம் தேதி நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வரவேற்பு விழா சென்னையில் நாளை மாலை நடைபெறுகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் என பலர் அதில் பங்கேற்க உள்ளனர்.


திரிஷா முதல் பிரபுதேவா வரை:
நடிகர்கள் பிரபு, திரிஷா, மீனா, பிரபு, அனிதா விஜயகுமார், அர்ச்சனா கல்பாத்தி, லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் முன்னதாக சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியாகின. சினிமா பிரபலங்கள் பலரும் மணமக்களான வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Varalaxmi Sarathkumar Nicholai Sachdev Varalaxmi Sarathkumar Marriage Trisha

ரிசப்ஷென் எப்போ?: திருமணத்தை தொடர்ந்து நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக மாலை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், ஹை செக்யூரிட்டி பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்: நடிகை வரலட்சுமி சரத்குமார் முன்னதாக நடிகர் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பின்னர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஜூலை 2ம் தேதி திருமணம் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X