மகளோட தல தீபாவளி முடிந்தவுடனே ஜப்பானுக்கு கிளம்பிய சரத்குமார்.. நெப்போலியன் ஓடோடி வரவேற்ற வீடியோ!
சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றுக் கொண்டே இருக்கின்றனர். சொந்த ஊருக்குச் சென்று கும்பாபிஷேகம் எல்லாம் முடித்த நிலையில், தனது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடத்தி வைத்த சரத்குமார் இந்த தல தீபாவளிக்கு சிறப்பாக சீர் கொடுத்து கோலாகலமாக அந்த பண்டிகையையும் நடத்தி முடித்தார்.
அடுத்து தனது நீண்ட கால நண்பர் நெப்போலியன் மகன் திருமணத்துக்காக தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் ஜப்பானுக்கு கிளம்பிப் போயுள்ள சரத்குமார் விமான நிலையத்துக்கே ஓடோடி வந்து நெப்போலியன் வரவேற்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

"மீசைக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம்டா.. ரோஷம் அதிகம்டா அதைவிட பாசம் அதிகம்டா" என பாட்டையும் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
நெப்போலியன் மகன் திருமணம் எப்போது?: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் வரும் நவம்பர் 7ம் தேதி ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ஏற்கனவே மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்துக்காக ஜப்பான் சென்றுள்ளனர். இந்நிலையில், அடுத்த பிரபலமும் குடும்பத்துடன் ஜப்பானுக்கு வந்து இறங்கியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஜப்பானுக்கு வந்த சரத்குமார்: தனது நண்பர் நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜப்பானுக்கு கிளம்பிச் சென்றுள்ளார் சரத்குமார். தனது 2வது மனைவி ராதிகா சரத்குமாரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் விமான நிலையத்துக்கு வந்து இறங்கியதும் விமான நிலையத்துக்கே சென்று நடிகர் நெப்போலியன் வரவேற்ற வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ளார்.
தல தீபாவளி ஜோர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற வரலட்சுமி சரத்குமாரின் தல தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டுமொத்த குடும்பமாக நின்று நடத்தி முடித்த சரத்குமார் மற்றும் ராதிகா தற்போது நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்துக்காக ஜப்பான் கிளம்பி சென்றுள்ளனர். ஜப்பானில் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ள திருமணத்துக்கு முன்பாக 6ம் தேதியான நாளை நடைபெறவுள்ள சங்கீத் நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் நடிகைகள் மீனா மற்றும் குஷ்புவுடன் இணைந்து நடனமாடப் போகிறார் என்று கலா மாஸ்டர் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











