வரலட்சுமி வாழ்க்கைக்கு பலமுறை முட்டுக்கட்டையாக இருந்த சரத்குமார்?.. ஷங்கர் பட வாய்ப்பே போயிடுச்சா?
சென்னை: நடிகர் சரத்குமாரின் மூத்த மனைவி சாயா தேவிக்கு மகளாக பிறந்த வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இன்று நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாகவே நிச்சயதார்த்தம், திருமண அழைப்பிதழ் வைப்பது என தனது மகளுக்காக அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகா பல இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று தங்கள் வீட்டுத் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர்.
பல கோடி ரூபாய் செலவில் தனது மகளின் திருமணத்தை நடத்தி வரும் சரத்குமார் சமீபத்தில் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகளும் தீயாக பரவி வருகின்றன.

பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் என பல பிரபலங்களை தனது மகளுடன் சென்று சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வந்த சரத்குமார் ஆரம்ப காலக்கட்டத்தில் தனது மகளின் வளர்ச்சிக்கு பல இடங்களில் முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
சரத்குமாரின் குடும்பம்: நடிகர் சரத்குமார் சாயா தேவியை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் மற்றும் சாயா தேவிக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை 2000ம் ஆண்டு விவாகரத்து செய்துக் கொண்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமார் திருமணம் செய்துக் கொண்டார். நடிகர் சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் ராகுல் எனும் மகன் உள்ளார். ராதிகாவுக்கும் அவரது முன்னாள் கணவர் ஹார்ட்டிக்கு பிறந்த மகள் ரயானேவும் ராதிகாவிடமே வளர்ந்து கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்துக் கொண்டார்.
ஷங்கர் பட வாய்ப்பு பறிபோனது?: ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் முதலில் வரலட்சுமி சரத்குமார் தான் நடிக்க வேண்டியது என செய்யாறு பாலு கூறியுள்ளார். அந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாரை நடிக்க விடாமல் சரத்குமார் தான் ஷங்கரிடம் போனில் பேசி வேண்டாம் என்று கூறினார் என்றும் அதன் பின்னர் தான் ஜெனிலியா நடித்தார் என்றும் பேசி திடுக்கிட வைத்துள்ளார்.
காதலுக்கும் முட்டுக்கட்டை?: விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் காதலித்து வந்ததாகவும் அவர்கள் இருவரது காதலுக்கும் நடிகர் சங்கம் பிரச்சனை காரணமாக சரத்குமார் தான் முட்டுக்கட்டையாக இருந்தார் என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னர் நடிகையாக போராடி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய வரலட்சுமியை தற்போது சரத்குமார் தாங்கும் விதமே வேறலெவலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











