மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார்.. "பேர்ட்ஸ் ஆப் பிரே" த்ரில்லர் மூவி அப்டேட் !

சென்னை : நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் "பேர்ட்ஸ் ஆப் பிரே" என்ற படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் சரத்குமார் நேற்று 66வது பிறந்த நாளை நேற்று குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்..

விரும்பி பயன்படுத்தும்

விரும்பி பயன்படுத்தும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அரசும் இதை தீவிரமாக கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறது. எனினும் பல்வேறு வேலைகளும் தற்பொழுது முடங்கி அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு மக்களும் வீணாக இருக்கும் நேரத்தில் அதிகம் விரும்பி பயன்படுத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று திரைப்படங்கள்.

வேதனையில் நடிகர்கள்

வேதனையில் நடிகர்கள்

சமீப காலத்தில் திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதால் எந்த ஒரு புதிய படம் வெளியிடப்படாமல் ரசிகர்களும் மற்றும் நடிகர்களும் வேதனையில் இருந்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடித்தது ஜாக்பாட் போன்று பல ஓடிடி தளங்களும் புதிய படங்களை தொடர்ந்து வெளியிட ஆரம்பித்துள்ளது.

ஓடிடி தளங்களை

ஓடிடி தளங்களை

கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு படங்களும் திரையில் வெளியிடாத நிலையில் மக்கள் பலரும் ஓடிடி தளங்களை நாடியுள்ளனர். இந்நிலையில் ஓடிடி தளங்களை இதுவரை பயன்படுத்தாத மக்களும் தற்பொழுது பயன்படுத்த ஆரம்பித்து இதன் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என சமீபத்திய சர்வே சொல்கிறது.

ஒவ்வொன்றாக வெளியாகி

ஒவ்வொன்றாக வெளியாகி

இதற்குமுன் சிறிய பட்ஜெட் படங்களும் புது கதாநாயகர்களின் படங்களும் மட்டுமே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மிகப்பெரிய நடிகர்களின் படங்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. சமீபத்தில் தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெய்ல் போன்ற திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட நிலையில், தமிழில் உச்ச இயக்குனர்களாக உள்ள வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா, கௌதம் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஒரு ஆந்தாலஜி படத்தையும் பிரபல ஓடிடி நிறுவனம் வெளியிட உள்ளது. மேலும் இந்த படத்தில் சாய்பல்லவி, பிரகாஷ்ராஜ், சாந்தனு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

இயக்குனர்களாக களமிறங்கி

இயக்குனர்களாக களமிறங்கி

இவ்வாறு இருக்கையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கும் 9 கதைகளை 9 இயக்குனர்களை கொண்டு தயாராக உள்ளது. மேலும் இதில் முதன்முறையாக நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி இயக்குனர்களாக களமிறங்கி உள்ளனர்.

சந்தோஷமான செய்தியையும்

சந்தோஷமான செய்தியையும்

ஓடிடி தளங்கள் நாளுக்கு நாள் புதிய படங்களையும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் உருவாக்கும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், நேற்று நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாளை கொண்டாடிய மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

அதிரடியாக வெளியிட்டு

அதிரடியாக வெளியிட்டு

ராதிகா சரத்குமாரின் பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதுடன், இவர் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவரும் "பேர்ட்ஸ் ஆப் பிரே" என்ற படத்தின் போஸ்டர்களையும் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிரடியாக வெளியிட்டு, இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என மகிழ்ச்சியான செய்தியை அதிரடியாக பகிர்ந்துள்ளார்.

முறுக்கு மீசை

முறுக்கு மீசை

கோட்டு சூட்டுடன் மிகப்பெரிய தாடி மற்றும் முறுக்கு மீசை என பார்க்கவே படு மாஸாக இருக்கும் "பேர்ட்ஸ் ஆப் பிரே" த்ரில்லர் படம் சரத்குமார் நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் முதல் திரைப்படமாகும்.

மிரட்டலான தோற்றத்தில்

மிரட்டலான தோற்றத்தில்

இந்த "பேர்ட்ஸ் ஆப் பிரே" கதை எழுத்தாளர் அர்ச்சனா சரத் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் உருவாக இருக்கிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த "பேர்ட்ஸ் ஆப் பிரே" படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கயிருக்கிறது. மிரட்டலான தோற்றத்தில் சரத்குமாரின் இந்த லுக் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X