குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்.. சரத்குமார், ராதிகா, வரலக்‌ஷ்மி எல்லாம் எப்படி இருக்காங்க பாருங்க!

சென்னை: சிராவயல் ஊரில் உள்ள காமாட்சி அம்மன் தான் நடிகர் சரத்குமாரின் குலதெய்வம். தங்களது குடும்ப குலதெய்வத்துக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார் சரத்குமார். ஒட்டுமொத்த சரத்குமாரின் குடும்பமே கலந்து கொண்ட கும்பாபிஷேக புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

நாட்டாமை, சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் எப்படி பெரிய குடும்பத்து பெரிய தலையாக நடித்திருந்தாரோ உண்மையிலேயே அதே போலத்தான் ரியல் லைஃப்பிலும் சரத்குமார் ஊரிலேயே பெரிய தலை என்பது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்தாலே புரிந்து விடும்.

Sarathkumar celebrates Kuladeivam temple kumbabishekam with his whole family

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்: "சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sarathkumar celebrates Kuladeivam temple kumbabishekam with his whole family

தங்கள் அனைவருடன் மேற்கொண்ட மனநிறைவான குலதெய்வ வழிபாட்டின் பலனாக, ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருளாசி மக்கள் அனைவருக்கும் கிடைக்க இந்த இனிய தருணத்தில் பிரார்த்திக்கிறேன்." என குலதெய்வ கோயில் மற்றும் வரசித்தி விநாயகர் கோயில்களின் கும்பாபிஷேக விழாவை நடத்தி முடித்த சரத்குமார் அதன் புகைப்படங்களை வெளியிட்டு இப்படியொரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.

Sarathkumar celebrates Kuladeivam temple kumbabishekam with his whole family

ராதிகா முதல் வரலட்சுமி வரை: நடிகை ராதிகா சரத்குமார், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடி குலதெய்வ கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களையும் சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பட்டுச் சேலையில் ராதிகாவும் வரலட்சுமி சரத்குமாரும் கோயிலில் மாலை மரியாதை என நடந்து செல்லும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Sarathkumar celebrates Kuladeivam temple kumbabishekam with his whole family

கோபுரம் மீது ஏறி: கோபுரத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் ஏறிக் கொண்டு கும்பாபிஷேகம் செய்யும் காட்சிகள் எல்லாம் வெளியாகி உள்ளன. அனைத்து போடோக்களுக்கும் ரசிகர்கள் லைக் போட்டு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X