சரத்குமார் துரத்த... சசிகுமார் ஓட... சென்னை அருகே அதிரடி சேஸிங்

By

சென்னை: நடிகர் சசிகுமாரை, சரத்குமார் துரத்தும் காட்சிகளுக்கான ஷூட்டிங், சென்னையில் நடந்து வருகிறது.

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர் அடுத்து, அரவிந்த்சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார். அடுத்து மிஸ் மேட்ச் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த சில வாராங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.

Sarathkumar chases sasikumar for Naa Naa

இதற்கிடையே அவர் இயக்கி வரும் படம், நா நா. கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சரத்குமாருடன் இணைந்து சசிகுமார் நடிக்கிறார். ஹீரோயினாக சித்ரா சுக்லா நடிக்கிறார். இவர் தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

இப்போது இதன் ஷூட்டிங் சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. அசிஸ்டென்ட் கமிஷனரான சரத்குமார், சசிகுமாரையும் ஹீரோயினையும் துரத்துவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்கள் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு பாங்காக்கில் நடக்கும் மணிரத்னத்தின் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள செல்கிறார் சரத்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X