twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ளீஸ்… வழிவிடுங்க.. நடுரோட்டில் இறங்கிய சரத்குமார்…பரபரப்பான சென்னை !

    |

    சென்னை : நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீரென சாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

    முதல் முறையாக இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்ற கமல்.. இசைஞானியுடன் சந்திப்பு.. வைரலாகும் போட்டோஸ்! முதல் முறையாக இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்ற கமல்.. இசைஞானியுடன் சந்திப்பு.. வைரலாகும் போட்டோஸ்!

    அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 40 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    திரைப்பயணம்

    திரைப்பயணம்

    1986-ல் சரத்குமாரின் நண்பர் தயாரித்த சமாஜமியோ ஸ்த்ரீ என்கிற தெலுங்கு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் சரத்குமார். இதையடுத்து, கார்த்திக் மற்றும் அம்பிகா நடித்த கண் சிமிட்டும் நேரம் படத்தைத் தயாரித்தார். மேலும் அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மாஸ் வில்லனாக

    மாஸ் வில்லனாக

    ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்தார் சரத்குமார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சிறந்த வில்லனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது சரத்குமாருக்கு கிடைத்தது. அதே ஆண்டில் சேலம் விஷ்ணு, மெளனம் சம்மதம், புதுப் பாடகன், வேலை கிடைச்சிடுச்சு, புரியாத புதிர், உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் கெளரவத் தோற்றங்களிலும் நடித்தார் சரத்குமார்.

    ஹீரோவாக

    ஹீரோவாக

    சூரியன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்று சரத்குமாரை ஒரு கதாநாயக நடிகராக நிலைநிறுத்தியது. மேலும், நாட்டாமை, மகாபிரபு, சூர்யவம்சம், நட்புக்காக என அந்த பத்தாண்டுகளில பல ஹிட், சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் படங்களிலும் நடித்தார்.

    அரசியலில்

    அரசியலில்

    1996ம் ஆண்டு திமுகவில் இணைந்த சரத்குமார் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இதையடுத்து, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சமத்துவ மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கிய சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணியில்வைத்து தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார்.

    ப்ளீஸ் வழிவிடுங்க

    ப்ளீஸ் வழிவிடுங்க

    இந்நிலையில், நடிகர் சரத்குமார், சென்னை மத்திய கைலாஷ்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகன நெரிசலில் சிக்கியது. இதனால் அந்த ஆம்புலன்ஸ் போவதற்கு வழி கிடைக்கவில்லை. இதையடுத்து, காரிலிருந்து திடீரென இறங்கிய நடிகர் சரத்குமார், அங்கிருந்த வாகன ஓட்டுனர்களை ஓரமா வாங்க... ஆம்புலன்சுக்கு வழிவிடுங்க என்ற கேட்டுக்கொண்டார். இதனால், அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டாலும், ஆம்புலன்சுக்கு வழி கிடைத்து விரைந்து சென்றது. இணையத்தில் இந்த வீடியோவை அவரின் தீவிர ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

    English summary
    Actor and politician Sarathkumar clearing traffic for an Ambulance near MadhyaKailash Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X