நெப்போலியன் மகன் கல்யாணத்துக்கு போயிட்டு.. 3 நடிகைகளுடன் ஜப்பானில் செம டான்ஸ் போட்ட நாட்டாமை!

சென்னை: நடிகர் சரத்குமார் தனது நண்பர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்துக்காக ஜப்பான் சென்றிருந்த நிலையில், அங்கே 3 ஹீரோயின்களுடன் அவர் நடனமாடிய வீடியோவை தற்போது நடிகை மீனா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாகவே நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் சினிமா வட்டாரத்தில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுசுக்கு இருக்கும் பிரச்சனைகளை கடந்து திருமணம் செய்து வைத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

sarathkumar meena kushbhu

மணமகள் அக்ஷயாவை தவிர அவரது பெற்றோர்களை ஏன் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறார் என்கிற கேள்விகளையும் சில விமர்சகர்கள் எழுப்பி உள்ளனர். அக்‌ஷயா மனைவியாக இல்லாமல் ஒரு நர்ஸ் போலத்தான் செயல்பட வேண்டும் என்றும் கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

ஜப்பானில் திருமணம்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான நெப்போலியன் தனது மகன் தனுஷ் திருமணத்தை ஜப்பானில் நடத்தி வைத்துள்ளார். சினிமாவில் வில்லனாக நடித்து வந்த நிலையில் தனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்றும் ஜெயசுதாவே எஜமான் படத்தில் கருவிலேயே சிசுவை கொன்றவர் இவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மறுத்த கதையையும் கூறியுள்ளார். ஜப்பானில் ஜாம் ஜாம் என திருமணம் நடந்து முடிந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் திருமணம் நடைபெறும் என்றும் நெப்போலியன் கூறியுள்ளார்.

கட்டாயப்படுத்தவில்லை: தனது மகன் தனுஷை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யாராவது உன்னை கட்டாயப்படுத்தினார்கள் என்று முதல் கேள்வியே மருமகளிடம் கேட்டோம் என நெப்போலியன் மற்றும் ஜெயசுதா இருவரும் கூறியுள்ளனர். திருமணத்தில் தனுஷுக்கு மனைவியாகப் போகிறோம் என்கிற எந்தவொரு வருத்தமும் இன்றி சந்தோஷமாகத்தான் அக்‌ஷயா இருந்ததை அனைத்து வீடியோக்களிலும் பார்க்க முடிகிறது என கடுமையாக விமர்சிக்கும் நபர்களுக்கு நெப்போலியன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

3 நடிகைகளுடன் நாட்டாமை போட்ட ஆட்டம்: நடிகர் சரத்குமார் தனது நண்பர் நெப்போலியனின் அழைப்பை ஏற்று ஜப்பானுக்கு தனது மனைவி ராதிகாவுடன் சென்றிருந்தார். திருமணத்தில் கலந்து கொண்ட அவர் மீனா மற்றும் குஷ்புவையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு ஜப்பானையும் சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், ராதிகா, மீனா மற்றும் குஷ்புவுடன் நாட்டாமை சரத்குமார் ஜப்பானில் நடனமாடிய வீடியோ ஒன்றை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் நடிகை மீனா வெளியிட்டுள்ளார்.

சந்தோஷத்தில் சரத்குமார்: சமீபத்தில் தனது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் நடத்தி வைத்த சரத்குமார் தற்போது நெப்போலியன் மகன் திருமணத்திலும் கலந்து கொண்டார். தொடர்ந்து சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோசமாக உள்ளார் சரத்குமார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சங்கீத் நிகழ்ச்சியில் நெப்போலியன் உடனும் நடிகைகள் குஷ்பு, ராதிகா மற்றும் மீனா நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X