சரத்குமாரின் முதல் மனைவி சினிமாவில் நடிக்கிறாரா?.. பிரபல இயக்குநர் படத்தில் நடித்துள்ள சாயா தேவி!

சென்னை: நடிகர் சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகா சரத்குமார் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை சினிமாவில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி பிரபல இயக்குநர் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sarathkumar first wife Chaya Devi done a mother role in Balas Vanangaan


சரத்குமார்: புலன் விசாரணை படத்தின் மூலம் 1990ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் சரத்குமார். கேப்டன் விஜயகாந்த் தான் அவரை அறிமுகப்படுத்தினார். பத்திரிகையாளராக வேலைப் பார்த்து வந்த சரத்குமார், சினிமாவில் அறிமுகமான புதிதில் வில்லனாக நடித்து வந்தார். அதன் பின்னர் ஹீரோவான அவருக்கு 1992ல் வெளியான சூரியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

ராதிகா சரத்குமார்:
முதல் மனைவியை பிரிந்த சரத்குமார் அதன் பின்னர் சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் ராதிகாவுடனே சரத்குமார் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊரில் நடைபெற்ற குலதெய்வ கும்பாபிஷேக விழாவில் அனைத்து மரியாதையும் ராதிகாவுக்கே செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவி சாயா தேவி: 1984ம் ஆண்டு சாயா தேவியை சரத்குமார் திருமணம் செய்துகொண்டார். சரத்குமார் - சாயா தம்பதியினருக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி. ஆனால், சரத்குமாரும் சாயாவும் 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். சாயா தேவி தற்போது தன் மகள் வரலட்சுமி சரத்குமாருடன் வாழ்ந்து வருகிறார். மகள் வரலட்சும் சரத்குமார் ஆரம்பித்த சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பல பெண்கலுக்கு உதவி செய்து வரும் சாயா தேவி தற்போது சினிமாவிலும் நடித்துள்ளார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

Sarathkumar first wife Chaya Devi done a mother role in Balas Vanangaan

வணங்கான் படத்தில்: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் சாயா தேவி நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே பேசப்படும் என்றும் படம் வெளியான பின்னர் அம்மா நடிகையாக பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர். ஏற்கனவே பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான தார தப்பட்ட படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X