திருமணம் என்பது ஒரு நாள் கூத்து கிடையாது.. சரத்குமாரின் முதல் மனைவி உருக்கமான பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் சரத்குமார் இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என மிரட்டி வருகிறார். இவரது முதல் மனைவி சாயா தேவி, முதன்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த பேசி உள்ளார்.
நடிகர் சரத்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கும் போதே சாயா தேவி திருமணம் செய்து கொண்டார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது இவர், வரலட்சுமி, பூஜா என இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்த்து வருகிறார். விவாகரத்து பெற்று பல ஆண்டுகள் ஆனநிலையில் முதல் முறையாக விவாகரத்து குறித்து பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

சரத்குமாரின் முதல் மனைவி: அந்த பேட்டியில், திருமணம் செய்து கொள்வதற்கு சரியான வயது இதுதான் என்று எதையும் நாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்வதற்கு மனதளவில் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் தவறான காரணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் என்பது ஒரு நாள் கூத்து கிடையாது.
திருமணம் உடல் தேவைக்காக இல்லை: திருமணம் என்பது ஒரு பயணம் அதில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது. நீங்கள் தவறான காரணத்தால் செய்தால் அது கடைசியில் விவாகரத்தில் தான் போய் முடியும் என்ற சாயா தேவி விவாகரத்து குறித்து உருக்கமாக பேசி உள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வரலட்சுமி சரத்குமார்: நடிகர் சரத்குமார் 2000 ஆம் ஆண்டு முதல் மனைவி சாயா தேவியை விவாகரத்து செய்து விட்டு, 2001 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ராகுல் என்று ஒரு மகன் இருக்கிறார். சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாகவும், குணச்சித்திர நடிகையாகவும் அதே நேரத்தில் வில்லி கதாபாத்திரத்திலும் தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டி அனைவரிடமும் கைதட்டு கைத்தட்டலை பெற்று வருகிறார். இவருக்கு தமிழை விட தற்போது தெலுங்கில் மவுசு அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











