வரலட்சுமியால்தான் அது கிடைத்தது.. மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸ் நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார் வரு. இதற்கிடையே அவரது தாய் சாயா தேவி பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வரலட்சுமிக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் சர்கார், சண்டகோழி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர்; நெகட்டிவ் ரோல்களிலும் கலக்குபவர். அவரது நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படம் 12 வருடங்கள் கழித்து ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: முதலில் விஷாலுடன் வரலட்சுமிக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வரலட்சுமியின் தாயான சாயா தேவி பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாயாவின் பேட்டி: இந்நிலையில் சாயா தேவி அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "வரலட்சுமியின் திருமண புகைப்படத்தை பார்க்கும்போது நாங்கள் எல்லோருமே அவரது சந்தோஷத்துக்காக ஒன்றாக நின்றோம் என்பது புரிகிறது. எங்களிடம் இருந்த குறைகள் அனைத்தையும் வருவுக்காக ஒதுக்கி வைத்தோம். அது ஒரே ஒரு காரணம் வரலட்சுமி மட்டும்தான். அவரது கல்யாணம் அவ்வளவு சந்தோஷமாக நடந்தது. அது ரொம்பவே அருமையான அனுபவமாக இருந்தது எங்களுக்கு.
அதிர்ஷ்டம்தான்: பண்டிகையோ, விசேஷமோ எது வந்தாலும் நாங்கள் அனைவருமே ஒரே டிசைனில், ஒரே கலரில் உடைகள் அணிவது வழக்கம். நாங்கள் ஒரு குடும்பமாக சேர்ந்து ஒன்றாக முன்னேறினோம். வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையே இரண்டு மகள்களுக்காக மட்டும்தான் இருக்கிறது. எனது இரண்டு மகள்களுமே ரொம்பவே அன்பானவர்கள். அவர்கள் எனது வாழ்க்கையில் கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்தான். நிக்கோலாய் சச்தேவை நான் மருமகன் என்று சொல்வதைவிடவும் மகன் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறார்.
அதிக பாசம்: அவர் அதீத அன்பையும் அக்கறையையும் வைத்திருக்கிறார். இந்தக் காலத்தில் இப்படிபட்ட ஒருவரை பார்ப்பது அரிதுதான். ஒரு அம்மாவை அவர் எப்படி பார்த்துக்கொள்வாரோ அப்படித்தான் என்னை அவர் பார்த்துக்கொள்கிறார். எந்த குறையும் இல்லை. எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அவர் அன்பை தருகிறார். ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் முதலில் என்னிடம்தான் வரலட்சுமி கூறுவார். அப்படித்தான் அவர் நிக்கோலாயை காதலிப்பதாக கூறினார். வரலட்சுமி சிறு வயதிலிருந்தே நிறைய சண்டை போடுபவர். அதேசமயம் கேரிங்காகவும் இருப்பார். வரலட்சுமி வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும்" என்றார்.


Click it and Unblock the Notifications