ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்!.. அப்பாவுக்கு புரியுற மாதிரி போஸ்ட் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், #HBDSuperstarRajinikanth ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என வாழ்த்தியுள்ளார். அவரது பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் நடிகர் சரத்குமாரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டாராக ஆசைப்பட்ட சரத்குமார்: சூரியன், நாட்டாமை, சூரியவம்சம், நட்புக்காக என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் நடிகர் சரத்குமாருக்கும் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற ஆசை முளைத்ததாகவும் அதன் காரணமாகவே சுப்ரீம் ஸ்டார் என தனக்கு பட்டம் வைத்துக் கொண்டார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சூப்பர் ஸ்டார் விஜய்: மேலும், இந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என மேடையில் சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. லியோ படத்தின் வெற்றிக்கே பெரிய முட்டுக்கட்டையாக ரஜினி ரசிகர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் மகள் அதிரடி: இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு, ”Happpyyyyy birthdaaayyyy to our one and only superrrrr star @rajinikanth thalaivaaaaa... #HBDSuperstarRajinikanth” என பதிவிட்டுள்ளார். தனலட்சுமி சரத்குமாரின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது அப்பா நடிகர் சரத்குமாரை கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்: ”உங்க அப்பன் இன்சைட்” என பரிதாபங்கள் சுதாகர் அடிவயித்தை பிடித்துக் கொண்டு அய்யோ அம்மா எரியுது என புலம்ப போகிறார் என ட்ரோல்ச் எய்து வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என அழைத்த நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் சரத்குமாரை பந்தாடின. இந்நிலையில், சமீபத்தில் அவர் 2026ல் நான் தான் முதல்வர் என கூறியிருப்பதும், மாமியார் ஆசைப்பட்டார் என பேசியிருப்பதையும் வைத்தும் ஏகப்பட்ட மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











