கொம்புசீவி படத்தில் நடிகையுடன் விஜயகாந்த் மகன் பரவசம்.. பிரேமலதா கொஞ்சம் கவனிங்க.. கோர்த்துவிட்ட சரத்குமார்
சென்னை: விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படமானது டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது இப்படம். சூழல் இப்படி இருக்க நேற்று நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் சரத்குமார் மேடையில் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.
கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் மீது திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் கவனம் குவிந்தது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படைத்தலைவன் திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் சண்முக பாண்டியனின் நடிப்பு நல்லபடியாக இருந்ததால் கேப்டனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
பொன்ராமின் கொம்புசீவி: படைத்தலைவன் படத்தை முடித்துவிட்டு பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு பெரிய படங்களை கொடுத்தவர் இயக்குநர். அந்தப் படங்கள்தான் இப்போது உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டுக்கு விதை போட்டவை. எனவே அதுமாதிரியே கொம்புசீவி படமும் சண்முக பாண்டியனின் வளர்ச்சிக்கு விதை போடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: சண்முக பாண்டியனுடன் சரத்குமார், தார்ணிகா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லரும் நன்றாகவே இருக்கிறது. மதுரையை பின்னணியாக கொண்டு இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் பொன்ராம். ட்ரெய்லரை பார்க்கையில் சரத்குமாரும், சண்முக பாண்டியனும் ஒரு தொழில் செய்வதும்; அதனால் வரும் பிரச்னையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும்தான் திரைக்கதை என்பது தெரிகிறது.
ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: படமானது டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் நேற்று சென்னையில் பிரமாண்டமாக ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமின்றி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சண்முக பாண்டியனின் சகோதரர் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள்.
சரத்குமார் பேச்சு: அந்த விழாவில் பேசிய சரத்குமார், "சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோ என்று சொன்னவுடன் நானும் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டேன். நான் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியவர் விஜயகாந்த். அவரை நினைத்தாலே எனது கண்களில் கண்ணீர் வந்துவிடும். விஜயகாந்த்தின் குணங்கள் சண்முக பாண்டியனுக்கு அப்படியே இருக்கின்றன. எனக்கும், அவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
நான் பற்ற வைக்கவில்லை: அதைவிட சண்முக பாண்டியனுக்கும், தார்ணிகாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. தார்ணிகாவுடன் பாண்டியன் பரவசமாக நடித்திருக்கிறார். கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்றுதான் சொன்னேன். பிரேமலதா அதை கொஞ்சம் கவனிக்க வேண்டும். நான் வேறு எதையும் பற்ற வைக்கவில்லை" என்றார். அவரது இந்தப் பேச்சு அரங்கில் இருந்தவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது.


Click it and Unblock the Notifications











