சிரஞ்சீவியிடம் கறாராக நின்ற சரத்குமார்! விஷயம் தெருஞ்சா நீங்களே அசந்து போவீங்க!
சென்னை: பாடி பில்டராக இருந்த ஒருவர் தமிழ்சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடிய படங்களின் நாயகனாக உயர்ந்தார் என்றால் அதற்கு சாட்சியம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்தான். வில்லனாக நடிக்கத் தொடங்கி கதாநாயகனான நடிகர்களில் சரத்குமார் தவிர்க்க முடியாத நபர். இவரது சூரிய வம்சம், சமுத்திரம், நாட்டமை, பாட்டாளி, சிம்ம ராசி போன்ற படங்கள் சரத்குமார் நடிப்பில் வெளியான ரீ ரிலீஸ் மெட்டீரியல் படங்கள் என்றே கூறலாம். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் இவரது முதிர்ச்சியான நடிப்பிற்கு பாராட்டைப் பெற்றுத்தந்தது.
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி திருமண ஏற்பாடுகள் நாளுக்கு நாள் வேகமாக நடைபெற்று வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கும் அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இருவருக்கும் நிச்யதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. கடந்த வாரத்தில் இருந்தே திரைப்பிரபலங்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து சரத்குமார் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற படத்தின் மூலம் தழிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். வரலட்சுமி சரத்குமாருக்கு சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆர்வம் இருந்த போதிலும் அவருடைய அப்பாவான நடிகர் சரத்குமார் அனுமதிக்காத காரணத்தால் நடிக்காமல் இருந்ததால் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.
அசாத்திய நடிப்பு: போடா போடி படம் வெளியாகி சிறிய இடைவெளிக்கு பின்னர், பாலா இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாரை தப்பட்டை படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மையில் கல் என்றே கூறவேண்டும். இந்த படத்திற்கு பின்னர் வரலட்சுமி சரத்குமார் சினிமா வட்டாரத்தில் இருக்கும் மற்ற நடிகைகளைப் போல் இல்லை, இவர் ஒரு கதாபாத்திரத்திற்காக பெரும் சிரத்தை எடுப்பார் என பலருக்கு புரியவைத்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக இவர் வில்லி கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்து வருகின்றார். படையப்பா படத்தை ரீ மேக் செய்தால் அதில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க சரியான தேர்வு என்றெல்லாம் கூட விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

வரலட்சுமியின் காதலர்: மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாக வரலட்சுமி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் சச்தேவை வரலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார்.

சிரஞ்சீவிக்கு அழைப்பு: இந்நிலையில் நடிகர் சரத்குமார் குடும்பத்தினர் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகைகள் நயன், சமந்தா உள்ளிடோருக்கும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை நேரில் சந்தித்து திருமண அழப்பிதழை வழங்கினர். இந்நிலையில், இன்று அதாவது ஜூன் 14ஆம் தேதி, தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை ஐதராபாத் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்த சரத்குமார் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழைக் கொடுத்து கட்டாயம் மகள் திருமணத்திற்கு வரவேண்டும் என அன்புக்கட்டளை இட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











