»   »  ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சரத்குமார்!

ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சரத்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஒரு படத்தில்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரும் நடிக்கிறார். சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார்,

Sarathkumar to join with GV Prakash

இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் சரத்குமார் இத் திரைப்படத்திற்காக முறைப்படி வாள் சண்டை பயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இப்படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்.

English summary
For the first time Sarathkumar is join hands with GV Prakashkumar.
Please Wait while comments are loading...