என் முன்னாள் மனைவியையும் ராதிகா அரவணைத்தார்.. சரத்குமார் ஓபன் டாக்

சென்னை: சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அவர் இப்போது குணச்சித்திர வேடத்தில் கலக்கிவருகிறார். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருக்கும் அவர் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவரது மகள் வரலட்சுமியும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தச் சூழலில் சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சரத்குமார் 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். ஏராளமான படங்களில் நடித்திருந்த அவருக்கு என்று பலர் ரசிகர்களாக இருந்தனர். மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை வென்று வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறியவர்தான் அவர். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமும் பட்டவர். நடிப்பதற்கு சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்ததால் தயாரிப்பாளர் ஆகலாம் என்ற முடிவில் நவரச நாயகன் கார்த்திக்கை வைத்து கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தை தயாரித்தார்.

Sarathkumar Open Talks about Radhika At Latest Interview

பல லட்சம் நஷ்டம்: ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. விட்டதை பிடிக்க மற்றொரு படத்தை தயாரித்தார் சரத். ஆனால் அப்படமும் தோல்வியை சந்திக்க சினிமாவிலிருந்து விலகக்கூடாது என முடிவெடுத்து முழு நேர நடிகர் ஆக திட்டம் தீட்டினார். அதற்காக நடிப்பு பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.

திருப்புமுனை தந்த புலன் விசாரணை: சரத்குமாருக்கு பெரும் திருப்புமுனையை தந்தது ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த்தை வைத்து இயக்கிய புலன் விசாரணை திரைப்படம். அந்தப் படத்தில் மிரட்டும் வில்லனாக தோன்றிய அவர் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார் சரத்குமார்.

ஹீரோ: ஒருகட்டத்தில் சரத்குமாருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைக்க அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரிய வம்சம், இந்து, மூவேந்தர், பாட்டாளி, மாயி என பல ஹிட் படங்களில் நடித்து 90களில் முன்னணி ஹீரோ என்ற இடத்தை பிடித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி விக்ரமுடன் விண்ணுக்கு மண்ணுக்கும், பிரபுதேவாவுடன் பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்களில் கெஸ்ட் ரோலாகவும் கலக்கியவர்.

சரத்குமார் பேட்டி: இப்போது குணசித்திர வேடத்தில் நடித்துவரும் அவர் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முன்னதாக சாயா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு பிறந்தவர்தான் இப்போது நடிகையாக இருக்கும் வரலட்சுமி. இந்தச் சூழலில் சரத்குமார் அளித்த ஒரு பேட்டியில், "எனக்கும், ராதிகாவுக்கும் திருமணம் நடந்த அன்று நான் சரியாகத்தான் வந்தேன். ஆனால் நான் தாமதமாக வந்தேன் என்று ராதிகா சொன்னார்.

முதலில் நண்பர்: ராதிகா முதலில் என்னுடைய நண்பர். அதன் பிறகுதான் என்னுடைய மனைவி. அவர் என்னுடைய குடும்பத்தை புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்தினார். குறிப்பாக எனது முதல் மனைவியை நான் பிரிந்து வந்திருந்தாலும்; அவரையும் அரவணைத்து; அவருக்கு பிறந்த குழந்தைகளையும் அரவணைத்து குடும்பத்தை நேர்க்கோட்டில் கொண்டு சென்றவர் ராதிகாதான். என்னுடைய முதல் மனைவியை அவர் வரலட்சுமியின் தாய் என்றே, வேறு ஆளாகவோ பார்த்தது இல்லை.

ராதிகாதான் சப்போர்ட்: வரலட்சுமி வந்து என்னிடம், நடிப்பதாக கூறினார். அதற்கு நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால் ராதிகாவும், வரலட்சுமியின் தாயும்தான் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து சந்தித்து, ஏன் அவள் நடிக்கக்கூடாது நடிக்கலாமே என்று சொல்லி புரியவைத்தார்கள். அந்த அளவுக்கு குடும்பத்தை ராதிகா அழகாக எடுத்து செல்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X