ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் சிபி.. டாப்பில் ராஜு.. சரவெடியாய் பேசி சென்ற சரத்குமார்.. பெட்டி யாருக்கு?
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நடிகர் சரத்குமார் உள்ளே நுழைந்தார்.
யாஷிகா ஆனந்த், மகத் போலவே இவரையும் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து விட்டனர்.
உள்ளே வெறுங் கையுடன் சரத்குமார் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் எங்கே பெட்டியை காணோமே என தேட ஆரம்பித்தனர்.

கம்பீர என்ட்ரி
பரம்பரா, பொன்னியின் செல்வன் என இப்பவும் பிசியாக நடித்து வரும் நடிகர் சரத்குமார் பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் போலவே செம கெத்தாக கம்பீர என்ட்ரி கொடுத்தார். போட்டியாளர்கள் அனைவரும் சரத்குமாரை பார்த்து அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போனார்கள். என்ன ட்விஸ்ட்டோட இவர் வந்திருக்கார் என குழம்பித் தவித்தனர்.

பிரியங்கா கணிப்பு
சரத்குமாரை பார்த்த பிரியங்கா அவர் பிரேக்கிற்காக வெளியே போன நிலையில், பணப்பெட்டியை கொடுத்து ஒருத்தரை தன் கையோடு அழைத்துச் செல்லவே சரத்குமார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் என சரியாக கணித்து விட்டார். நிரூப்பும் உடனடியாக ஆமாம் என்பது போல தலையாட்டினார்.

ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு சிபி
பிக் பாஸ் தொடர்ந்து பார்ப்பதில்லை என்கிற உண்மையை ஒப்புக் கொண்ட சரத்குமார் போட்டியாளர்கள் குறித்த சில ஸ்டடிக்களை மட்டும் செய்து விட்டுத்தான் உள்ளே வந்தேன் எனக் கூறினார். சிபியை பார்த்து ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு சிபி என்றும் எப்போதும் கருத்துக்களை பளிச்சென சொல்லிடுறீங்க என்றும் பாராட்டித் தள்ள மற்ற நிரூப் மற்றும் பாவனியின் முகம் அப்படியே வாடிப் போனது.

ராஜு தான் டாப்
சிபியை தொடர்ந்து ராஜு பற்றி பேசிய சரத்குமார், ராஜு என்ன பேசினாலும் அது மீமாக மாறிவிடுகிறது. குளிச்சிட்டு வரேன்னு சொன்னதை கூட மீமாக மாற்றி விட்டனர். ராஜு நீங்க டாப்பில் இருக்கீங்க என மறைமுகமாக இந்த 3 லட்சம் ரூபாய் பெட்டி உங்களுக்கு தேவைப்படாது என்பதை உணர்த்தி விட்டு சென்றுள்ளார் சரத்குமார்.

பிக் பாஸ் டீச்சர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல சீசன்களை பார்த்து கரைத்துக் குடித்து விட்டு இப்படித்தான் ஆட வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கிளாஸ் எடுத்து வரும் நிரூப்பை பார்த்து நீங்க அடுத்த சீசன் முதல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கும் டீச்சராக மாறி விடலாம் என்றார். மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களின் தனித் திறமையையும் சரத்குமார் பாராட்டி சென்றார்.
Recommended Video

யாருமே எடுக்கல
சரத்குமார் பணப்பெட்டியை எடுக்க போட்டியாளர்களை கன்வின்ஸ் செய்வார் என எதிர்பார்த்தால் தான் நடித்த வெப் தொடரான பரம்பரா பற்றிய புரமோஷனை மட்டுமே செய்து விட்டு சென்றார். செவ்வாய்க்கிழமை எபிசோடின் இறுதிவரை பணப்பெட்டியை யாருமே எடுத்துக் கொண்டு வெளியேறவில்லை. நாளை ரூ. 5 லட்சத்திற்கான பெட்டியுடன் வேறு யாராவது வருவார்களா? அல்லது இந்த முறை பணத்தை யாருமே எடுக்கப் போவதில்லையா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











